பாக்., சிதறி விடும் என கூறுவதா? ராஜ்நாத்துக்கு கண்டனம்

Updated : அக் 15, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (22)
Advertisement

இஸ்லாமாபாத்: 'பயங்கரவாதத்தை ஒடுக்காவிட்டால், பாகிஸ்தான் துண்டு துண்டாக உடைந்து விடும் என, இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதை கடுமையாக கண்டிக்கிறோம்' என, பாக்., தெரிவித்துள்ளது.






ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், சமீபத்தில், ஹரியானாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, 'பயங்கரவாதிகளை ஒடுக்காமல், அவர்களுக்கு ஆதரவு அளித்தால், பாகிஸ்தான், பல துண்டுகளாக சிதறுவதை, யாரும் தடுக்க முடியாது. காஷ்மீர் விஷயத்தை, பாகிஸ்தான் மறந்து விட வேண்டும்' என்றார்.





இதற்கு, கண்டனம் தெரிவித்து, பாக்., வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா - பாக்., இடையே, ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவுகிறது. இதுபோன்ற நேரத்தில், இந்தியாவின் மூத்த அமைச்சர் ஒருவர், வன்முறையை துாண்டும் வகையில் பேசுவது, மிகவும் கண்டனத்துக்குரிய செயல். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர், அண்டை நாட்டுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசுவதை, சர்வதேச நாடுகள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

அதேநேரத்தில், பாகிஸ்தானின் உள் விவகாரத்துக்கு ஏதாவது பதிப்பு ஏற்பட்டால், எந்தவிதமான சவாலையும் சந்திக்க, ராணுவ வீரர்களும், மக்களும் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
21-அக்-201919:53:47 IST Report Abuse
Jayvee இதுக்குத்தான் தமிழக முஸ்லிம்கள் பிஜேபி க்கு ஒட்டு போடுவதில்லை.. பாகிஸ்தானை அழிப்பேன் என்றுசொன்னால் தமிழகத்தில் BJP ஒருபோதும் வெற்றி பெறாது .. ஏற்கனவே ஹவாலா NGO மீது அழுத்தம் கொடுத்து மதமாற்ற வியாபாரத்தை தடுத்ததால் அரிசி மூட்டை மக்கள் மோடிக்கு ஓட்டு போடுவதில்லை
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
19-அக்-201919:13:14 IST Report Abuse
Sampath Kumar சும்மா சொல்ல கூடாது இப்பதான் சூடு பிடிக்குது இந்திய அரசியில் 1
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
16-அக்-201917:39:37 IST Report Abuse
Sridhar ராஜ்நாத்தின் பேச்சுக்கே இவ்வளவு பயந்து கூக்குரலிடுகிறார்களே, நாளைக்கு உண்மையாகவே சிதறும்போது என்ன செய்வார்கள்? அந்த நாட்டின் பரப்பளவிற்கும் பொருளாதார முக்கியத்துவத்துக்கும் ஏற்றவாறா அவர்கள் பேசுகிறார்கள்? பாக்கிஸ்தான் அழியவேண்டிய நாடு. சிந்து சமவெளி நாகரிகம் பிறந்து வாழ்ந்த மண்ணிலே உட்கார்ந்து கொண்டு, அந்த மண்ணின் புராதானத்தையே அவமதிக்கும் விதத்தில் தீவிரவாதத்தை வளர்த்துவிட்டுக்கொண்டு நாட்டின் மக்கள் மனதில் நஞ்சை விதைத்து வரும் அந்த அரசும் ராணுவமும் அழியும் நாள் வெகுதொலைவில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X