வதந்தி பரப்பும் காங்.,; பிரசாரத்தில் மோடி குற்றச்சாட்டு

Updated : அக் 17, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (5+ 10)
Advertisement
காங்., வதந்தி, குற்றச்சாட்டு, பிரசாரம், தங்கல் , கட்டார்

சண்டிகர் : ''காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் வதந்தியை பரப்புகின்றனர். அவர்களுக்கு, ஹரியானா மாநில வாக்காளர்கள், தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்,'' என, பிரதமர் மோடி பேசினார்.


வாக்குறுதி


ஹரியானாவில், வரும், 21ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சராகி தாத்ரி, தனேசர் ஆகிய இடங்களில் நடந்த பிரசார கூட்டங்களில், பிரதமர் மோடி பேசியதாவது: ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு, சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள், நாடு முழுவதும் வதந்தியை பரப்புகின்றனர்.

சர்வதேச அளவிலும், வதந்தியை பரப்புகின்றனர். காங்கிரஸ் தலைவர்களுக்கு தைரியமிருந்தால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவை, மீண்டும் அமல் படுத்துவோம் என, தேர்தல் வாக்குறுதி அளிக்க தயாரா?

என் மீது, என்னவிதமான அவதுாறையும் பரப்புங்கள். அந்த அவதுாறு, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அவதுாறாக கூட இருக்கட்டும். எனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். அதேநேரத்தில், நம் நாட்டின் முதுகில் குத்துவதை நிறுத்துங்கள்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு, நாட்டின் நலன் கருதியே ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் பரப்பும் வதந்திகளை, ஹரியானா மக்கள் முறியடிக்க வேண்டும். இந்த சட்டசபை தேர்தலில், காங்கிரசை தோற்கடிப்பதன் மூலம், அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.


முக்கியத்துவம்


சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை, சமீபத்தில் சந்தித்தபோது, தங்கல் என்ற ஹிந்தி படத்தை பார்த்ததாகவும், பெண் குழந்தைகளால் எவ்வளவு முக்கியமான செயல்களை செய்ய முடியும் என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்தார். பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்தை, ஹரியானா மாநிலத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், மத்திய அரசு செயல்படுத்தியிருக்க முடியாது. ஹரியானா மாநிலத்தில், பெண்களுக்கு மதிப்பும், முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (5+ 10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
16-அக்-201920:29:29 IST Report Abuse
Sampath Kumar இந்த நாட்டில் ஜனநாயகம் எந்த அளவுக்கு மோசம் ஆகியுள்ளது என்று மக்கள் குமுறுகிறார்கள் உண்மையை யாராலும் மறைக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-அக்-201910:56:05 IST Report Abuse
Lion Drsekar வதந்தி. சூறையாடல், மறியல், மக்களை துன்புறுத்துதல், பழிவாங்குதல், மக்களை பிரித்தாளுதல், பொய்யயே உண்மையாக்கி மக்களின் வாழ்வாதாரங்களை அடியோடு அழித்தல், இப்படி இவைகள் எல்லாம் மனித இனத்துக்கும், வாழ்க்கைக்கும் தேவை இல்லையோ அவைகள் அனைத்தும் இன்றைக்கு ஒரு அரசியல் கட்சிகளின் கொள்கைகளாக வைத்துக்கொண்டு பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டை ஆண்டவரும் தீயசக்திகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், ஜனநாயக முறைப்படி, நாட்டை நடத்திக்கொண்டு செல்லும் மோடியை பாராட்டியே தீரவேண்டும், காரணம் மக்கள் எதிர்பார்த்தது, எதிர்பாப்பது, இது போன்ற அமைப்புகளை சட்டப்படி கலைக்கவேண்டும், பரம்பரை ஆட்சியை ஒழிக்கவேண்டும், ஜாதி மத வெறியர்களை கூண்டோடு ஒழிக்கவேண்டும், ஆனால் எதையுமே கண்டுகொள்ளாமல் ஜனநாயக முறைப்படி எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நாட்டை நடத்தி செல்வது என்பது ஒரு மிகப் பெரிய கடினமான வேலை, இறைவனே வந்தாலும் இந்த தீயசக்திகளை ஒழிக்க முடியாத நிலையில் மிகவும் நாகரிகமாக நாட்டை எடுத்துச்செல்லும் பிரதமருக்கு பாராட்டுக்கள்,நாம் ஒன்றும் இவரது கட்சியும் இல்லை, எந்த கட்சியும் இல்லை, தாய் நாடு ஒன்றே நமக்கு முக்கியம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
16-அக்-201909:22:11 IST Report Abuse
ஆப்பு ஓயாமல் உழைப்பவர் சினிமா பாத்து நேரத்தை வீணாக்கலாமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X