கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு

Updated : அக் 17, 2019 | Added : அக் 15, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
Rahul,Modi,PM,மோடி,ராகுல்,கவனத்தை,திசை திருப்புகிறார்,குற்றச்சாட்டு

மும்பை : ''முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பிரதமர் மோடி செயல்படுகிறார்'' என காங்கிரஸ் எம்.பி. ராகுல் பேசினார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ. - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அக்.21ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. யவாத்மாலில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் பேசியதாவது:பிரதமர் மோடி சில தொழில் அதிபர்களின் ஒலி பெருக்கியாக செயல்படுகிறார்.

அவர் அமல்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் விவசாயிகள் தொழிலாளிகள் சிறு வர்த்தகர்கள் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. சில தொழில் அதிபர்களுக்காக கார்ப்பரேட் வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் ஏழை மக்களுக்காக எந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.பொதுத்துறை நிறுவனங்களான துறைமுகம் ஏர் இந்தியா சுரங்கங்கள் ஆகியவற்றை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன.

அதானி அம்பானி போன்ற தொழில் அதிபர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்படுகிறார். முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் செயல்படுகிறார். ஜெட் விமான கொள்முதலில் 35 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்தள்ளது. ஆனால் எந்த மீடியாக்களும் இது குறித்து எழுதுவது இல்லை.மஹாராஷ்டிராவில் ஏழைகள் விவசாயிகள் தொழிலாளுக்காக செயல்படும் நல்ல அரசை காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


'கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்'

ஹிந்து மகாசபா அமைப்பின் தலைவரான மறைந்த சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது அளிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதாக மஹாராஷ்டிரா மாநில பா.ஜ. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது கொடுக்கப்பட்டால் இந்த நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

-மனீஷ் திவாரி, செய்தி தொடர்பாளர், காங்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kurinjikilan - Madurai,இந்தியா
16-அக்-201920:41:33 IST Report Abuse
kurinjikilan பட்டயா போய் ரீசார்ஜ் ஆன பேட்டரி கொஞ்சநாள் ஓடத்தான் செய்யும்..
Rate this:
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
16-அக்-201919:00:08 IST Report Abuse
Ramaraj P பொருளாதார அறிவு இருப்பவர்களால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு ஓட்டு மெஜாரிட்டி இல்லை என்பதே உண்மை??? தேவையில்லாத புலம்பல் மன அழுத்தத்தை அதிகப்படுத்தும்...
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-அக்-201916:18:38 IST Report Abuse
Endrum Indian பாவமாக இருக்கின்றது பப்புவை பார்த்தால், யார் என்ன செய்ய முடியும் இப்போது அவனுடைய லேட்டஸ்ட் உளறல் ஒரு பிரதமரை பார்த்து "மக்களின் கவனத்தை திசைதிருப்பி அவர்களது பணத்தை ஜேப்படி திருடர்கள் திருடுவார்கள். அதேபோல மோடியின் ஒரே வேலை உங்களது கவனத்தை திசைதிருப்பி உங்கள் பணத்தை சில குறிப்பிட்ட தொழில் அதிபர்களுக்கு மாற்றிவிடுவதுதான்". என்கவுன்ட்டர் தான் ஒரே தீர்ப்பு. இதற்கும் பொறுமை காத்தால் இதைப்போல உளறல்கள் அதிகமாகுமே தவிர குறையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X