பொது செய்தி

இந்தியா

வளர்ச்சி 6.1 சதவீதம் பன்னாட்டு நிதியம் குறைந்தது

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (8)
Advertisement
பன்னாட்டு நிதியம் குறைந்தது

வாஷிங்டன்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பாண்டில், 6.1 சதவீதமாக இருக்கும் என, குறைத்து கணித்துள்ளது, ஐ.எம்.எப்., எனும், பன்னாட்டு நிதியம்.கடந்த ஏப்ரல் மாதத்தில், பொருளாதார வளர்ச்சி, 7.3 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், தற்போது வளர்ச்சியை, 1.2 சதவீதம் குறைத்து, 6.1 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. கடந்த, 2018ல், நாட்டின் உண்மையான வளர்ச்சி விகிதம், 6.8 சதவீதம் என்ற நிலையில், 2019ல், 6.1 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.




வட்டி குறைப்பு, கார்ப்பரேட் வரி குறைப்பு, கிராமப்புற நுகர்வுக்கு ஆதரவளிக்கும் அரசு திட்டங்கள் போன்றவற்றால் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த ஆண்டில் ஏற்றம் பெற்று, 7 சதவீதமாக இருக்கும் என்றும் பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.சீனாவை பொருத்தவரை, 2018ல், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.6 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில், 6.1 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டில், 5.8 சதவீதமாக மேலும் குறையும் என்றும் பன்னாட்டு நிதியம்தெரிவித்துள்ளது.இதற்கு முன், கடந்த ஞாயிறு அன்று, உலக வங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6 சதவீதமாக இருக்கும் என்று குறைத்து அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
16-அக்-201915:28:51 IST Report Abuse
Balaji பொருளாதார ஸ்திரத் தன்மையை அடைய பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்..... இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை இன்னும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது.....
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
16-அக்-201913:01:49 IST Report Abuse
RM பாஜக மேக்கப் இன்னும் நான்கு வருடங்களில் வெளுக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-அக்-201908:21:27 IST Report Abuse
ஆரூர் ரங் தாவூத் இப்ராஹிமோடு சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி தொடர்பான வழக்கில் தேசியவாத காங். மூத்த தலைவர் பிரபுல் படேல .இதுதான் காங்கிரஸ் விட்டுவைத்துப்போன அடித்தளம் . நாட்டின் சொத்துக்களை ஊழலில் ஆட்டயபோட்டு அந்நிய நாடுகளில் பயங்கரவாதிங்களுக்குக் கொடுத்தால் என்ன முன்னேற்றம் சாத்தியம்? இன்றும் பாகிஸ்தான் எல்லாவற்றுக்கும் காங்கிரஸ் தலைகளின் பேச்சுக்களையே ஆதாரமாகக் காட்டுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X