தாவூத் கூட்டாளி உடன் தொடர்பு:பிரபுல் படேலுக்கு'சம்மன்'

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (18)
Advertisement
தாவூத் கூட்டாளி உடன் தொடர்பு:பிரபுல் படேலுக்கு'சம்மன்'

புதுடில்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி தொடர்பான வழக்கில் தேசியவாத காங். மூத்த தலைவர் பிரபுல் படேலுக்கு அமலாக்க துறை 'சம்மன்' அனுப்பியுள்ளது.மும்பை நிழல் உலக தாதாவாக இருந்த தாவூத் இப்ராகிமின் கூட்டாளி இக்பால் மிர்ச்சி மஹாராஷ்டிராவில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார்.

இவருடன் சேர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரும் தேசியவாத காங். மூத்த தலைவருமான பிரபுல் படேலும் அவரது மனைவியும் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக சில ஒப்பந்தங்கள் செய்ததாக புகார் எழுந்தது.





இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பிரபுல் படேலுக்கு அமலாக்க துறை சார்பில் 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் வரும் 18ல் ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பிரபுல் படேல் கூறுகையில்'வெறும் யூகத்தின் அடிப்படையில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்'' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
16-அக்-201922:39:05 IST Report Abuse
adalarasan ஸ்பெக்ட்ரம், கேசுகளில், பண மாற்றம், சில ,தாவூத், தொடர்புள்ள, டுபாய்,கம்பெனிகளுடன், வர்த்தகம், பணமாற்றம், நடந்ததாக, குற்றச்சாட்டு, பத்திரிக்கைகளில்,வந்ததை நினைவூட்டுகிறேன்ஒரு நாள், அந்த பூதமும், வெளி வரும்?பபழைய,நீதி அரசர், ரேட்டர்வொழ்வு ஆகிவிட்டார்?, கேஸ், புது கோர்ட்டில், நடிக்கிறது,
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
16-அக்-201915:45:32 IST Report Abuse
Balaji எல்லா கட்சியினரும் அவர்கள் சார்ந்த பகுதியில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கத்தான் செய்கிறார்கள்.. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பதைப்பற்றி இவர்களுக்கு கவலையில்லை..... தொழில் நல்லபடியாக நடக்கிறதா கல்லாப்பெட்டி தடையில்லாமல் நிறைந்துகொண்டு இருக்கிறதா என்பது தான் இவர்களின் பிரதான நோக்கமே........
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-அக்-201920:28:33 IST Report Abuse
Nallavan Nallavanசிக்கியது தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவர் என்பதால் எல்ல்லாக்கட்சியினரும் என்று அனைவரையுமே இழுத்து லாவணி பாடுகிறீர் .........
Rate this:
Share this comment
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
16-அக்-201913:02:17 IST Report Abuse
R KUMAR வெறும் யூகத்தின் அடிப்படையில் வழக்கு உள்ளது என்று கூறியுள்ளார். அப்படியென்றால், பத்திரத்தில் உள்ள கையொப்பமும் வேறு எவரோ போட்ட கையொப்பம் என்று கூறினாலும் கூறுவார். இதன் மூலம் கிடைத்த லாபத்தை இவருடைய வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருந்தால், அதுவும் தனக்கு தெரியாது என்று கூறுவார். இவர்களுக்கு முஸ்லீம் நாடுகளில் அளிக்கப்படுவது போன்று உடனே தண்டனை அளித்தால் இது போன்ற செயல்களை குறைக்கலாம், இல்லையென்றால், இன்னும் அறுபது ஆண்டுகளுக்கு ஜாமீன் பெற்றே காலத்தை ஓடிவிடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X