அமராவதி:கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள, செலிகேரி கிராமத்தை சேர்ந்த 12 பேர், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள கோவில்களுக்கு, புனித பயணம் மேற்கொண்டனர். தெலுங்கானாவின் பத்ராசலத்தில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, ஆந்திராவின் அன்னாவரம் பகுதியில் உள்ள சத்திய நாராயணா கோவிலுக்கு செல்வதற்காக, மலைப் பாதை வழியாக, மினி பஸ்சில் இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆந்திராவின் கிழக்கு அமராவதி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில், மினி பஸ் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில், 7 பேர், பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.