பொது செய்தி

தமிழ்நாடு

5 வயது சிறுவனின் அபார நினைவாற்றல்: இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
 5 வயது சிறுவனின் அபார நினைவாற்றல்: இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்

அம்பத்துார்:சாதனை புரிய வேண்டும் என்ற, லட்சியத்தில், ஆறு நிமிடங்களில், 250 நாடுகளின் பெயர் மற்றும் அவற்றின் தலைநகர்களின் பெயரை கூறிய, பள்ளி மாணவர், இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.

ஒவ்வொருவருக்கும், 'நினைவாற்றல்' என்பது வரம். அதிலும், பள்ளி, கல்லுாரி பருவங்களில், அந்த வரத்தால் கிடைக்கும் வெற்றிகள் தான், மனிதனின் முன்னேற்றத்திற்கும், அவனது எதிர்காலத்திற்கும், அடித்தளமாக அமைகிறது. அந்த வகையில், 5 வயது சிறுவன், நினைவாற்றலில் சாதித்துள்ளான்.

சென்னை, அம்பத்துாரை சேர்ந்தவர் முருகன்; டெய்லர். அவரது மனைவி பொன்லட்சுமி. அவர்களது மகன் வினுவர்தன், 5; அதே பகுதியில் உள்ள, ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா பள்ளியில், 1ம் வகுப்பு படித்து வருகிறான்.அவன், 2 வயதில், தன் பெற்றொரின் மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை நினைவில் கொண்டு, அடுத்த முறை அழைப்பு வந்தால், யார் அழைக்கின்றனர் என்பதை, பெற்றோரிடம் கூறி மகிழ்ந்திருக்கிறான்.

அவனது நினைவாற்றல், அவர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. எனவே, தங்கள் பிள்ளையின் நினைவாற்றலை, நல்ல முறையில் பயன்படுத்த, அவர்கள் முடிவு செய்தனர்.அவன் வயதுக்கு ஏற்றது போல், இணைய தள உதவியுடன், ஒவ்வொரு நாட்டின் தேசிய கொடி மூலம், அந்த நாட்டின் பெயர், தலைநகரத்தின் பெயர், அந்நாட்டு ரூபாய் நோட்டுகளின் பெயர்களை சொல்லிக் கொடுத்தனர்.மாணவன் வினுவர்தன், தன் நினைவாற்றலுக்கான பயிற்சியை மேற்கொண்டான்.

அதன் பயனாக, நேற்று, பள்ளி வளாகத்தில் நடந்த, அப்துல் கலாம் பிறந்தநாள் விழா நிகழ்வில், 6 நிமிடம், 15 வினாடிகளில், அவன் முன் வைக்கப்பட்ட, தேசிய கொடிகள் மூலம், 250 நாடுகளின் பெயர், அவற்றின் தலைநகரம் மற்றும் ரூபாய் நோட்டுகளின் பெயர்களை கூறி அசத்தினான். அந்த நிகழ்ச்சிக்கு, இந்திய சாதனை புத்தக, தீர்ப்பாளராக இருந்த விவேக் நாயர், மாணவனின் சாதனையை பதிவு செய்தார். அதற்காக, மாணவனுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ் அளிக்கப் பட்டன.

பள்ளி முதல்வர் எஸ்.பத்மினி மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள், பார்வையாளர்கள், மாணவன் வினுவர்தனை, பாராட்டி உற்சாகப்படுத்தினர்.ஒவ்வொரு குழந்தையிடமும், ஏதாவது ஒரு திறமை நிச்சயமாக இருக்கும். அதை, பெற்றோர் தான் கண்டறிந்து, உற்சாகப்படுத்த வேண்டும்.

எங்கள் மகன் வினுவர்தன், இந்த சாதனைக்காக, 2 ஆண்டு பயிற்சி எடுத்தான். ஆரம்பத்தில், 10 நிமிடங்கள் ஆனது. இன்று, 6 நிமிடங்களில் முடித்திருக்கிறான். இது தவிர, 250 திருக்குறளும், மனப்பாடமாக சொல்லுவான். அவன் இன்னும் சாதிக்க வேண்டும். எதிர்காலத்தில், கல்வியிலும், முதல் மாணவனாக வர வேண்டும் என்பதே, எங்கள் எதிர்பார்ப்பு.முருகன், பொன்லட்சுமி, சிறுவனின் பெற்றோர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
18-அக்-201921:18:49 IST Report Abuse
Sampath Kumar வாழ்த்துக்கள் அனால் எவன் வளர்ந்து வரும் பொது சந்திக்க வேண்டிய விஷயம் ஏராளம் ? அதை முதலில் சொல்லி கொடுக்கவும் ?/
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-அக்-201916:16:55 IST Report Abuse
A.George Alphonse கொடுத்து வைத்தவர்கள். அதிஆற்றல் கொண்டவனை மைந்தனாக பெற்றதற்கு.
Rate this:
Cancel
16-அக்-201920:23:48 IST Report Abuse
Mohan Poluguva Balasami வாழ்த்துக்கள் கண்ணா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X