சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தோசை மாவில் துாக்க மாத்திரை கலந்து கணவனை கொன்ற மனைவி கைது

Added : அக் 16, 2019 | கருத்துகள் (24)
Advertisement
 தோசை மாவில் துாக்க மாத்திரை கலந்து கணவனை கொன்ற மனைவி கைது

புழல்:தோசை மாவில் துாக்க மாத்திரையை கலந்து, கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி, தம்பியுடன் கைதானார்.

புழல் அடுத்த, புத்தகரம், வெங்கடசாய் நகர் விரிவாக்கம், 13வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 26; அதே பகுதியில் உள்ள, கோழி இறைச்சி கடையில் வேலை செய்தார்.இவரது மனைவி அனுபிரியா, 26. ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு, 4 வயது மகன் உள்ளார்.

மதுப் பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றதால், கணவன் - மனைவி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டது.கடந்த, 13ம் தேதி இரவும், அவர்களுக்குள் தகராறு நடந்தது. மறுநாள் காலை, சுரேஷ் திடீரென, வீட்டில் இறந்து கிடந்தார்.புழல் போலீசார், சாதாரண மரணமாக வழக்கு பதிந்து விசாரித்தனர்.

பிரேத பரிசோதனையில், அவர் மூச்சுத்திணறி இறந்தது தெரிந்ததை அடுத்து, அனுபிரியா மற்றும் விழுப்புரம் மாவட்டம், முகையூர் கிராமத்தைச் சேர்ந்த, அவரது தம்பி முரசொலி மாறன், 19, ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர்.சுரேஷ் தினசரி குடித்துவிட்டு தகராறு செய்ததால், அவரை கொலை செய்ய, அனுபிரியா திட்டமிட்டதும், இதற்காக, தன் சித்தி மகனான முரசொலி மாறனை, அனுபிரியா கூட்டு சேர்த்ததும் தெரிய வந்தது.

சம்பவத்தன்று, அனுபிரியா அதிகளவில் துாக்க மாத்திரை கலந்த தோசை மாவில், தோசை சுட்டு, சுரேஷுக்கு கொடுத்துஉள்ளார்.அவர் உறங்கிய பின், முரசொலி மாறனுடன் சேர்ந்து, தலையணையால் முகத்தில் அழுத்தியும், துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், கொலை செய்துள்ளனர்.இதையடுத்து, அனுபிரியா, முரசொலி மாறன் ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
23-அக்-201901:51:03 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) இறைச்சிக்கடையில் அதிகபட்சம் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் ? அந்த பணத்தில் குடித்துவிட்டு வீட்டிற்கு என்ன கொடுப்பார் ? குடியால் மற்றொரு குடும்பம் அழிந்தது..
Rate this:
Share this comment
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
22-அக்-201915:28:20 IST Report Abuse
Kumar periyaar ஏன் இவருக்கு கடவுளின் பயமே இல்லையே
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
22-அக்-201911:57:09 IST Report Abuse
vasumathi விவாகரத்து , அம்மா வீட்டிற்கு சென்று இருக்கலாம் . இப்போ தேவை இல்லாமல் கொலை. குழந்தை பாவம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X