கர்தார்பூர் வரும் சீக்கியர்களிடம் 20 டாலர் நுழைவு கட்டணம் ?

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (20)
Advertisement
கர்தார்பூர் வரும் சீக்கியர்களிடம் 20 டாலர் நுழைவு கட்டணம் ?

லாகூர்,' சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் தேவின் சமாதியான கர்தார்பூர் சாஹிப் பாகிஸ்தானில் சர்வதேச எல்லையை ஒட்டி ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த சமாதிக்கு செல்வதை சீக்கியர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர்.
குருநானக்கின் 550வது பிறந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இப்புனித இடத்திற்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நானக் நகரிலிருந்து சர்வதேச எல்லை வரை சிறப்பு பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.




பாகிஸ்தான் எல்லையிலிருந்து கர்தார்பூர் வரை சாலை அமைக்க பாக்.கும் ஒப்பு கொண்டுள்ளது. கர்தார்பூர் சாஹிப்புக்கு சீக்கியர்கள் 'விசா' இல்லாமல் செல்லவும் இரு நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து நவம்பர் 9ல் இந்திய சீக்கியர்களுக்காக கர்தார்பூர் பாதை திறக்கப்படும். தினமும் இந்தியாவிலிருந்து 5000 சீக்கியர்கள் இந்த பாதையில் விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர் என பாக். கூறியது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து வரும் சீக்கியர்களிடம் தலா 20 டாலர் நுழைவு கட்டணமாக வசூலிக்க பாக். அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான வரைவு அறிக்கையையும் ஹைகமிஷன் வாயிலாக இந்தியாவிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாக். அனுப்பிய வரைவு திட்ட அறிக்கைக்கு இந்தியா பதில் அளிக்காமல் உள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
16-அக்-201918:52:20 IST Report Abuse
Ramaraj P ஐம்பது ஆயிரம் பேருக்கு எழுபது இலட்சம் ரூபாய். பாகிஸ்தான் பொருளாதாரம் உயர்ந்தது விடும். ஏன் அவர்கள் வசூலிக்க கூடாது. இங்கே அனைத்து இந்து கோவில்களில் பணம் வசூலிக்க படுவது இல்லையா??? டோல்கேட் இல்லையா???
Rate this:
Share this comment
Cancel
16-அக்-201913:22:21 IST Report Abuse
ஆப்பு இங்கே திருப்பதி போன்ற இடங்களில் வசூலிப்பதில்லையா? காசு இருக்குறவங்க குடுக்கட்டும்.
Rate this:
Share this comment
Rohin - jk ,இந்தியா
16-அக்-201914:02:52 IST Report Abuse
Rohinநீ இவ்வளவு ஆதரவா இங்க இருந்து தினம் தினம் கூவிகிட்டு இருக்கறத விட, நீ உங்க இடமான அங்கேயே போய் நல்லா கூவலாமே...
Rate this:
Share this comment
Cancel
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
16-அக்-201912:59:02 IST Report Abuse
G.BABU இந்த திட்டத்திற்கு பாகிஸ்தான் இவ்வளவு ஆர்வம் காட்டியதும் .... இந்தியாவுடனான பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அதை விரைந்து முடித்ததின் காரணம் இப்போது புரிகிறது. சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்பார்கள் .......சுமார் 5000 பயணிகள் தினமும் அனுமதிக்கப்படுவார்கள் என்பது திட்டம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X