சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது குடிக்க பணம் தராததால் வெட்டிய ஐந்து பேர் கைது

Added : அக் 16, 2019
Advertisement

சிவகாசி:சிவகாசி புதுத்தெருவை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி பால்பாண்டி 18. பணி முடிந்து இரவில் டூ வீலரில் பிச்சாண்டி தெரு வழியாக வந்து கொண்டிருந்தார். அதே பகுதி அஜித் 19, தீனதயாளன் 19, சாந்தகுமார் 24, எஸ். பாண்டியராஜ் 24, எஸ்.பாண்டியராஜ் 21 ஆகிய 5 பேர் வழிமறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளனர். மறுத்ததால் பால்பாண்டி தலையில் அஜித் கத்தியால் வெட்டினார். மற்றவர்களும் அவரை தாக்கி டூ வீலரையும் சேதப்படுத்தினர். சிவகாசி கிழக்கு போலீசார் ஐவரையும் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்: சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் அய்யனார் 28. நாரணாபுரம் ரோட்டில் டூ வீலரில் சென்றார். அதே பகுதி குணசேகரன், கத்தியால் அய்யனாரை மிரட்டி ரூ. 200, வாட்ச் பறித்தார். சிவகாசி கிழக்கு போலீசார் குணசேகரனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X