சிதம்பரத்தை இன்று கைது செய்கிறது அமலாக்கத் துறை

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
சிதம்பரத்தை இன்று கைது  செய்கிறது அமலாக்கத் துறை

புதுடில்லி: 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' மோசடி வழக்கில், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை, அமலாக்கத் துறை இன்று கைது செய்ய உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு செய்வதற்கு, காங்., ஆட்சியின்போது, 2007ல் அனுமதி அளிக்கப்பட்டது. இதில் மோசடி நடந்துள்ளதாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில், மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.


latest tamil newsசிதம்பரத்தை, சி.பி.ஐ., அதிகாரிகள், ஆக., 21ல் கைது செய்தனர். தற்போது, நீதிமன்றக் காவலில், டில்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய காவல், நாளையுடன் முடிகிறது.
இந்த வழக்கில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அமலாக்கத் துறை, டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
நேற்று நடந்த விசாரணையின்போது, 'நீதிமன்ற வளாகத்தில், சிதம்பரத்தை, 30 நிமிடங்கள் விசாரிக்கலாம்; அதன் பிறகு, காவலில் எடுக்க மனு தாக்கல் செய்யலாம். திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அவரை கைது செய்யலாம்' என, நீதிமன்றம் கூறியது.
இதற்கு, 'நீதிமன்ற வளாகத்தில் அவரை விசாரிக்கிறோம். இங்கேயே அவரை கைது செய்கிறோம்' என, அமலாக்கத் துறை கூறியது.
ஆனால், அதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. 'அவருடைய கவுரவத்தையும் பார்க்க வேண்டும். பொது இடத்தில் வைத்து கைது செய்யக் கூடாது' என, நீதிமன்றம் கூறியது.
அதையடுத்து, சிதம்பரத்தை திஹார் சிறையில் நாளை காலை கைது செய்து விசாரிக்கவும், காவலில் எடுத்து விசாரிக்க மாலையில் மனு தாக்கல் செய்யவும், அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.


* ஜாமின் மனு


இதற்கிடையே, சி.பி.ஐ., தொடர்ந்துள்ள ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், ஜாமின் கேட்டு, சிதம்பரம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவருடைய சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி வாதிட்டதாவது:
சிதம்பரத்தை, 60 நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என, சி.பி.ஐ., விரும்புகிறது. சிறையில் தொடர்ந்து வைத்து அவரை அவமானப்படுத்த நினைக்கின்றனர். அதனால், எந்தக் காரணமும் இல்லாமல் அவருடைய காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அவரை ஜாமினில் விட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் வாதிட்டனர்.இந்த மனு மீது, சி.பி.ஐ., தரப்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இன்று வாதிட உள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-அக்-201912:44:27 IST Report Abuse
Bhaskaran நல்ல ரப்பர் தடி கொண்டு பின்பக்கத்தில் நயப்புடைத்தால் மனிசன் கதறிக்கொண்டு உண்மையை கக்குவார்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-அக்-201910:39:33 IST Report Abuse
Malick Raja முதலில் அறியவேண்டிய ஒன்று அடுத்த ஆட்சிமாற்றம் வந்தால் குறுகிய காலத்தில் வளர்ந்த கட்சி 70 வருட காலம் வளர்ந்த கட்சியை காட்டிலும் இருமடங்கு பொருளாதார நிலை பெற்றது குறித்து விசாரணை நடத்தி அது சம்பந்தமாக 100.க்கு மேல் பிடிக்கப்பட்டு உடனடி விசாரணை அத்துடன் தண்டனையும் பெறுவார்கள்.. மாட்டு சாணத்தில் முன்பகுதி பின்பகுதி என்று வித்தியாசம் இல்லை அதுபோல அரசியல்வாதிகளில் முன் பின் என்று யாரும் உத்தமர்கள் இல்லை அனைவரும் அதாவது பெரும்பாலோர் கொடுமையான நயவஞ்சகத்துடன் வாழும் கொள்ளையர்களை விட கொடூரமானவர்கள்..சி த மனைவி எவ்வளவு மண்டை கனத்துடன் சொன்னார் இனி நீட் தேர்வை யாராலும் கொண்டுவர முடியாது என்று... இன்று தனது கணவனை கூட தக்கவைக்க முடியாத நிலையிலுள்ளார்.. சி த.. கொண்டுவந்த GST. Tollgate.. வரிகள் அத்துடன் ஏழை எளிய நடுத்தர மக்களை பாதித்த வங்கியில் ரூ 50.ஆயிரத்துக்குமேல் பரிவர்த்தனை கூடாது ..ஏறுமதி இயக்குமதி தேவையற்ற நடைமுறைகள் . இன்னும் மதுரை விமானநிலையம் கொண்டுவந்தபோது கிடைக்கப்பெற்றா லாபங்கள்.. காசு ஆசை பணம் கொழுத்த மனிதனை சாகும்வரை விடுவதில்லை. இப்போது எல்லாம் காட்சியாக இவரின் கண்களுக்கு முன்னாள் வந்துகொண்டு இருக்கும் ...பயனில்லை நிவர்த்திக்க .. இதைப்போல அனைத்துஅரசியல்வாதிகளையும் சுளுக்கெடுத்தால் தேர்தல்களில் ஏழை எளியவர்கள் நின்று மக்கள் பிரதிநிதி ஆவார்கள் அவர்களுக்கு பாதுகாப்பு தேவை இருக்காது.. வசதி வாய்ப்புக்கள், உல்லாசவிடுதிகள், தினம் 25,000.00.ரூ உணவு ..உயரிய சம்பளம் போன்றவர்களெல்லாம் இருக்கவே இருக்காது. நாடு தானாக சுபிட்சமடைந்து மக்கள் நல்வாழ்வு வாழ்வார்கள் .. ஆனால் கயவர்கள் விடவே மாட்டார்கள் .
Rate this:
mohan - chennai,இந்தியா
16-அக்-201914:00:53 IST Report Abuse
mohanஎல்லா காட்சியிலும் உள்ள ஊழல் செய்த எல்லோரையும் உள்ளே தள்ளினால், இந்தியா அரசிற்கு ஒரு மிக பெரிய salute அடிக்கலாம்......
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
16-அக்-201910:10:52 IST Report Abuse
Indhuindian விடாதீங்க வெளியிலே விடாதீங்க ஏதாவதுஒரு கேச போடுங்க அது பொது இடத்துலே ...... அடிச்ச கேசா இருந்தாலும் பரவாயில்லே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X