பொது செய்தி

தமிழ்நாடு

தொடங்கியது வடகிழக்கு பருவமழை

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
TN,Tamilnadu,rain,தமிழகம்,தமிழ்நாடு,மழை, வடகிழக்கு பருவமழை,  புதுக்கோட்டை, சென்னை, நாகப்பட்டினம், நாகை

சென்னை: ஒருநாள் முன்னதாக இன்றே (அக்., 16) வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
கனமழைக்கு வாய்ப்பு


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை நோக்கிய காற்று, தென்னிந்தியா முழுவதும் பரவியுள்ளது. நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருநாள் முன்பே தமிழகத்தில் தொடங்கியுள்ளது. இதனால் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் 2 நாட்கள் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக்கூடும். குமரி கடல் மற்றும் மாலத்தீவு பகுதியில் அக்., 17, 18 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், பூந்தமல்லி - 11 செ.மீ., பாம்பன் - 10 செ.மீ., சோழவரம் - 9 செ.மீ., சிவகாசி - 7 செ.மீ., தாமரைபாக்கம் மற்றும் செங்குன்றம் தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
பரவலாக மழை

திருவள்ளூரில், திருத்தணி, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. புதுக்கோட்டையில் திருமயம் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில், பேரளம், நன்னிலம், மாங்குடி, கொரடாச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது.

நாகையில் நாகூர், வேளாங்கண்ணி, திருக்குவளை, திட்டச்சேரி, கீழ்வேளூர் போன்ற பகுதிகளில் மழை பெய்தது.


latest tamil newsசென்னையில் கிண்டி, ஈக்காட்டு தாங்கல் உள்பட பல பகுதிகளில் அதிகாலை மழை பெய்தது. தொடர்ந்து, மீண்டும் காலை 9.30 மணியளவில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.


நெல்லையில் நல்ல மழை


திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று காலை வரையிலான நிலவரப்படி தென்காசி அருகே ஆய்க்குடியில் 88ம் மீ மழை பெய்தது.


நெல்லை மாவட்ட மழை அளவுபாபநாசம்:
9 மி.மீ

சேர்வலாறு:
7 மி.மீ

மணிமுத்தாறு:
9.4 மி.மீ

ராமா நதி:
25 மி.மீ

கருப்பா நதி:
16 மி.மீ

குண்டாறு:
11 மி.மீ

அடவிநயினார்:
25 மி.மீ

அம்பாசமுத்திரம்:
11.60 மி.மீ

ஆய்குடி:
88.40 மி.மீ

சேரன்மகாதேவி:
6 மி.மீ

பாளையங்கோட்டை:
8.60 மி.மீ
ராதாபுரம்:
4 மி.மீ

சங்கரன்கோவிலில்:
51 மி.மீ

செங்கோட்டை:
6 மி.மீ

சிவகிரி:
4 மி.மீ

தென்காசி:
45.20 மி.மீ

நெல்லை:
6 மி.மீ


வேலூர் மாவட்ட மழை அளவு

வேலூர்:3.8 மி.மீ.,
ஆம்பூர்:20 மி.மீ.,
வாணியம்பாடி:12.4 மி.மீ.,
ஆலங்கயம்:5.2 மி.மீ.,
அரக்கோணம்:11.4 மி.மீ.,
காவேரிபாக்கம்:11 மி.மீ.,
வாலாஜா:3 மி.மீ.,
சோலிங்கூர்:16 மி.மீ.,
குடியாத்தம்:11 மி.மீ.,
மேல் ஆலத்தூர்:13.2 மி.மீ.,
பொண்ணை அணை:18 மி.மீ.,


கோவையில் இன்று கனமழை கொட்டும்


கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவும், நேற்று மதியமும் மிதமான மழை பெய்தது. மாவட்டத்தில் இன்றும், பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, கணிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறுகையில், ''கோவையில் இன்று, 20 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.


latest tamil newsவிடுமுறை


புதுக்கோட்டையில் நேற்று மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்தது. இந்நிலையில், நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
16-அக்-201917:11:09 IST Report Abuse
 Sri,India கண்மாய்களையும் எரிகளையும் தூர் வாரியதாக கணக்கு முடிக்கப்பட்டு பல ஆயிரம் கோடிகள் பட்டுவாடா செய்யப்படும் ....சீக்கிரமாக கோடீஸ்வரனாக சீக்கிரம் ஒப்பந்த வேலை எடுக்க வேண்டும் . அது எப்படித் தான் மழை பெய்யும் காலத்தில் தூர் வருவதாக "கணக்கு " எழுதுகிறார்களோ??
Rate this:
Share this comment
Cancel
16-அக்-201916:20:46 IST Report Abuse
I support Santhosh Gopal we see immediate breaking news when there is a cloud in Chennai. People of other cities, they wont bother whether it is raining in Chennai or not..
Rate this:
Share this comment
Cancel
Santhosh Gopal - Vellore,இந்தியா
16-அக்-201912:57:37 IST Report Abuse
Santhosh Gopal கோவையில் 20mm பெய்றது தான் தினமலர் பாணியில் மழை கொட்டுவது என்று அர்த்தமா? தினமலருக்கு தமிழ்நாட்டில் உள்ள அக்கடா துக்கடா ஊர்கள் எல்லாம் பிடிக்கும் வேலூர் மாநகரை தவிர..... வேலூரில் வெயில் அடித்தால் மட்டும் கொட்டை எழுத்தில் செய்திகள் வரும், அதுவும் உடனுக்குடன் மற்ற மழை, குளிர், நல்ல விஷயங்கள் வரவே வராது. தினமலருக்கு வேலூரில் கசப்பான சம்பவம் ஏதாவது நடந்ததா? கோவை, சென்னை, மதுரையில் தூறல் போட்டாலே ரன்னிங் டைட்டில் வந்துவிடும், வேலுாரில் இரண்டு மணி நேரமாக இடியுடன் மழை பெய்தாலும் எந்த செய்தியும் வராது. தமிழ்நாட்டில் உள்ள வேறு எந்த குக் கிராமத்தில் மழை பெய்தாலும் தினமலரில் முதல் பக்கத்தில் ரன்னிங் நியூஸ் வந்துவிடும், வேலூரை தவிர. நான் இதை பல முறை கவனித்திருக்கிறேன். இதே கோடையில் சில natkal தான் வெயில் அதிகமாக இருக்கும், அதுவும் கத்திரி வெயிலில், ஆனால் எதோ வேலூர் மட்டுமே வெயிலூர் போலவும், மற்ற ஊர்கள் எல்லாம் காஷ்மீர் போலவும் செய்திகள் வரும். சில சமயங்களில் நினைப்பேன், தினமலருக்கு வேலூரை தவிர மற்ற தமிழ்நாட்டில் உள்ள அணைத்து குக் கிராமத்திலும் அலுவலகங்கள் இருக்கும் அதனால் உடனுக்குடன் செய்திகள் வருகிறது. நேற்று முன் தினம் சிவகங்கையில் கருமேகங்கள் மிரட்டியது என்று போட்டோ போட்டார்கள், எத்தனை முறை வேலூரில் அது போன்ற நிகழ்வு, கருமேகங்கள் சூழ்ந்து இருந்து மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது, ஆனால் அந்த புகை படங்கள் எல்லாம் வராது. ஏன் என்றால் தினமலருக்கு வேலூர் மாநகரம் பிடிக்காது. தினமலருக்கு மட்டும் அல்ல, வேறு எந்த மீடியாக்களுக்கும் வேலூர் என்றாலே பிடிக்காது. தமிழ்நாட்டில் இது வரை ஆண்டு மழை சராசரியாக 820 mm பெய்து வேலூர் மூன்றாவது இடத்தில உள்ளது, இது யாருக்காவது தெரியுமா? ஆனால் வேலூர் வெயிலூர், இது மட்டுமே மற்ற மாவட்ட மக்களுக்கு தெரிந்தது.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
16-அக்-201921:45:20 IST Report Abuse
K.Sugavanamநல்ல அலசல்..உங்கள் கருத்து ஏற்புடையதே.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X