பாகிஸ்தானின் அணு ஆயுத 'மிரட்டல்': ஐ.நா.,வில் இந்தியா எச்சரிக்கை

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (5)
Advertisement
Pak PM,Nuclear Threat, Brinksmanship,India, UN,  பாகிஸ்தான், இந்தியா, அணு ஆயுதம், மிரட்டல்,

நியூயார்க்:'பயங்கரவாதத்தை தடுக்காமல், அணு ஆயுதங்கள் மூலம் மற்றவர்களை மிரட்டும் போக்கு அதிகரித்து வருகிறது' என, ஐ.நா., கூட்டத்தில் பாக்., பெயரைக் குறிப்பிடாமல், இந்தியா எச்சரித்துள்ளது.

ஐ.நா.,வின் ஆயுதக் குறைப்பு தொடர்பான மாநாடு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நடந்தது. இதில், இந்தியா சார்பில், ஐ.நா.,வுக்கான துாதர் பங்கஜ் சர்மா பேசியதாவது:உலகின் பாதுகாப்பு ஆபத்தான நிலையிலேயே உள்ளது. ஆயுதக் குறைப்பு தொடர்பாக பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டாலும், அவை தற்போது காலாவதியாகி விட்டன.
இந்நிலையில், பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடு, எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. அதை தடுத்து நிறுத்தாமல், ஆபத்தின் எல்லை வரை செல்லும் வகையில், 'எங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளது' என, மிரட்டல் விடுக்கிறது. இந்தப் போக்கு அதிகரிப்பது ஆபத்தானது. ஆனால், இதை தடுத்து நிறுத்தாமல், ஆயுதக் குறைப்பை வலியுறுத்தாமல், ஐ.நா.,வின் இந்த அமைப்பு மவுனியாக உள்ளது வருத்தமளிக்கிறது.

தற்போதும் எங்களுக்கு ஒரு நம்பிக்கை உள்ளது. பேச்சு மற்றும் ஒத்துழைப்பு மூலம், எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.கடந்த, 2006ல், ஐ.நா., பொது சபையில், அணு ஆயுதக் குறைப்பு தொடர்பாக, ஒரு செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில், உலகெங்கும் அணு ஆயுதங்களை குறைக்க, முற்றிலுமாக நீக்க, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
16-அக்-201911:12:12 IST Report Abuse
Krishna Why Direct Mention Of Pakistan Nuclear Threat Not Raised-Advertised Every where Every Place Pakisan Must Be Block aded crippled From All Sides By UN For Threat Of Humankind
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
16-அக்-201910:30:19 IST Report Abuse
GMM நியாயம், சட்ட நடவடிக்கை, கட்டுபாடு உடைய நாட்டிடம் ஆயுத பலம் வேண்டும். பாக். போன்ற நாட்டில் அணு ஆயுதம் அந்த நாட்டுக்கு விபத்து ஏற்படுத்தி விடும்? இன்று ஆயுத பலம் மதிப்பிட முடியாத நிலை. பாக். அணு ஆயுத பலம் உலக அமைதிக்கு நல்லது அல்ல. UN கட்டுபடுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
16-அக்-201909:49:26 IST Report Abuse
blocked user பாக்கிகளிடம் இருக்கும் குண்டு சீன தொழில் நுணுக்கத்தில் உருவானது. ஆகவே அது வெடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
Rate this:
Share this comment
16-அக்-201916:45:16 IST Report Abuse
ஆப்புதப்பாகப் புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க. அக்காலத்திலேயே சீன வெடி நல்லா வெடிக்கும். தெரியலைன்னா ஒங்க தாத்தாவைக் கேட்டுப் பாரு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X