பொது செய்தி

இந்தியா

சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (62)
Share
Advertisement
ப.சிதம்பரம், சிதம்பரம், ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி,  அமலாக்கத்துறை, திஹார் சிறை,  சிபிஐ, கோர்ட்,  நீதிமன்றம், நளினி, கார்த்தி, p.chidambaram, chidambaram, cbi court, court, INX case, Tihar,  enforcement directorate,  cbi, Nalini,  Karthi,

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், சிபிஐ., அமைப்பை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர் திஹார் சிறையில், நீதிமன்ற காவலில் உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தை நாட உள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு செய்வதற்கு, காங்., ஆட்சியின்போது, 2007ல் அனுமதி அளிக்கப்பட்டது. இதில் மோசடி நடந்துள்ளதாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில், மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. சிதம்பரத்தை, சி.பி.ஐ., அதிகாரிகள், ஆக., 21ல் கைது செய்தனர். தற்போது, நீதிமன்றக் காவலில், டில்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய காவல், நாளையுடன்(அக்.,17) முடிகிறது. இந்த வழக்கில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அமலாக்கத் துறை, டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.


latest tamil news




நேற்று நடந்த விசாரணையின்போது, 'நீதிமன்ற வளாகத்தில், சிதம்பரத்தை, 30 நிமிடங்கள் விசாரிக்கலாம்; அதன் பிறகு, காவலில் எடுக்க மனு தாக்கல் செய்யலாம். திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அவரை கைது செய்யலாம்' என, நீதிமன்றம் கூறியது. இதற்கு, 'நீதிமன்ற வளாகத்தில் அவரை விசாரிக்கிறோம். இங்கேயே அவரை கைது செய்கிறோம்' என, அமலாக்கத் துறை கூறியது. ஆனால், அதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. 'அவருடைய கவுரவத்தையும் பார்க்க வேண்டும். பொது இடத்தில் வைத்து கைது செய்யக் கூடாது' என, நீதிமன்றம் கூறியது.

இதனையடுத்து திஹார் சிறைக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 பேர், சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். 2 மணி நேரம் விசாரணை முடிந்த நிலையில், சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17-அக்-201907:40:22 IST Report Abuse
Natarajan Ramanathan இப்போதுதான் பசி முகத்தில் திமிர் அடங்கி கொஞ்சம் சவக்களை தெரிய ஆரம்பித்துள்ளது.
Rate this:
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
16-அக்-201919:03:54 IST Report Abuse
padma rajan பிள்ளை சிதம்பரம் கார்த்திக் இன்னும் அப்பாவுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு அரிச்சந்திரனை போல் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டு உள்ளார்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-அக்-201916:55:03 IST Report Abuse
Endrum Indian என்ன இந்த நாடகம், ஊழல் செய்தது ரூ 25 லட்சம் கோடி செய்தது பல பல பினாமி பெயரில் எல்லாம் தெரியும் சாதாரண மக்களுக்கும் ஆனால் இந்த பெட்டி வாங்கி ஜாமீன் கொடுப்பது முதல் சாட்சி இல்லை என்று சொல்வது ஒன்றே என் குறிக்கோள் எண்ணம் இந்த அநீதித்துறை இருக்கும் வரை இவர்களை ஒன்னும் செய்ய முடியாது.
Rate this:
rajan - ,
16-அக்-201919:00:55 IST Report Abuse
rajanஅதானே திருடுபவன் சாட்சியை பக்கத்தில் வைத்துக்கொண்டா திருடுவான்? கைப்புண்ணுக்கு கண்ணாடியா வேண்டும்? புழுத்துப்போன சட்டங்களை சீர்திருத்தம் செய்யுங்கள் முதலில்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X