பொது செய்தி

தமிழ்நாடு

மின் வாரிய கடன் ரூ.1 லட்சம் கோடி: 'உதய்' திட்டத்தில் சேர்ந்தும் நெருக்கடி

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (28)
Advertisement
மின்வாரியம், கடன், உதய் திட்டம்,

மத்திய அரசின், 'உதய்' திட்டத்தில் இணைந்தும், தமிழக மின் வாரியத்தின் கடன் அதிகரித்த படியே உள்ளது. மொத்த கடன் விரைவில், 1 லட்சம் கோடி ரூபாயை எட்டவுள்ளது.

தமிழக மின் வாரியத்திற்கு, மின் கட்டணம், அரசு மானியம் வாயிலாக, ஆண்டுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.இந்த வருவாய், மின்சாரம் மற்றும் எரிபொருள் கொள்முதல், ஊழியர்கள் சம்பளம் போன்றவற்றுக்காக செலவிடப்படுகிறது. மேலும், தனியாரிடம், அதிக விலைக்கு மின்சாரம், நிலக்கரி மற்றும் உபகரணங்கள் வாங்கப்பட்டதால், வரவை விட செலவு அதிகமாகி, ஆண்டுதோறும், வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. கடன் வாங்கும் நிலைமை உருவானது.இதனால், புதிய மின் திட்டங்களை, வாரியத்தால் செயல்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், மாநில மின் வாரியங்களின் நிதி நிலைமையை சரிசெய்ய, மத்திய அரசு, 'உதய்' என்ற திட்டத்தை துவக்கியது.இத்திட்டத்தின் கீழ், 2015 செப்., நிலவரப்படி, மின் வாரியங்களின் மொத்த கடனில், மாநில அரசுகள், 75 சதவீதம் ஏற்க வேண்டும். அதன்படி, அந்த காலத்தில், தமிழக மின் வாரியத்தின் கடன், 81 ஆயிரத்து, 312 கோடி ரூபாய்.அதில், அதிக வட்டி செலுத்தக் கூடியது, 30 ஆயிரத்து, 420 கோடி ரூபாய். தமிழகம், 2017 ஜனவரியில், உதய் திட்டத்தில் இணைந்தது. உடன், மின் வாரியத்தின் அதிக வட்டி கடனில், 75 சதவீதத்தை, அதாவது, 22 ஆயிரத்து, 815 கோடி ரூபாயை, தமிழக அரசு ஏற்றது. அதிக வட்டி செலுத்தக் கூடியதில் மீதியுள்ள, 7,605 கோடி ரூபாய் கடனை அடைக்க, வாரியம் கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்ட வேண்டும்.கடன் பத்திரங்கள் வாங்குவோருக்கு, கடனுக்கான வட்டியை விட, சற்று குறைந்த வட்டி வழங்கலாம். ஒரே சமயத்தில், பணமும் தர தேவையில்லாததால், வட்டி செலவு மிச்சமாகும் என, முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை கடன் பத்திரங்கள் வெளியிடப் படவில்லை.
இந்நிலையில், உதய் திட்டத்தில் இணைந்தும், தற்போதைய நிலவரப்படி, மின் வாரியத்தின் கடன், 90 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது விரைவில், 1 லட்சம் கோடி ரூபாயை எட்ட உள்ளது. அதில், பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன், தமிழக பவர் பைனான்சிடம் வாங்கிய கடன் மட்டும், 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது.

மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில், 2016ல் வீசிய, 'வர்தா' புயல்; டெல்டா மாவட்டங்களில், 2018ல் வீசிய, 'கஜா' புயலால், வாரியத்திற்கு, 4,000 கோடி ரூபாய்க்கு மேல், இழப்பு ஏற்பட்டது.புதிய மின் திட்டங்களுக்கான ஒப்பந்த ஆணை, சந்தை மதிப்பை விட அதிகம் வழங்குவதாக புகார்கள் எழுகின்றன. இது போன்ற காரணங்களால், வாரியத்தின் கடன் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக, உயரதிகாரிகள் விசாரணை நடத்தினால், நிதி நெருக்கடியை தவிர்க்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
16-அக்-201914:10:30 IST Report Abuse
NewIndia_DigitalIndia பிஜேபி கை வச்சது எதுவுமே உருபடல , இது மட்டும் விதி விலக்கா ?
Rate this:
Share this comment
Nagarajan D - Coimbatore,இந்தியா
16-அக்-201914:49:56 IST Report Abuse
Nagarajan Dஎங்கெல்லாம் அரசு ஒரு தொழில் செய்கிறதோ அங்கெல்லாம் நஷ்டம் தான் வரும் அரசு வேலை கிடைத்த உடன் இருக்கும் தொழிற் சங்கத்தில் சேர்ந்து வேலை செய்யாமல் வெட்டியாக திரிந்து கொண்டிருக்கும் அனைத்து ஊழியர்களையும் வேலையை விட்டு துரத்திவிட்டால் எல்லாம் சரியாகும். தேவையான ஆட்களின் எண்ணிக்கை 100 என்றால் அங்கே 400 பேர் வேலையில் இருந்தால் எப்படி லாபம் வரும் இருக்கும் 400 ஆட்களும் காலையில் கையெழுத்து போட்டால் போதும் மீண்டும் மாலையில் கையெழுத்து போட்டு விடுகிறார்கள் எப்படியும் சம்பளம் வந்து விடும் வேலை செய்ய வேண்டியதில்லை (நான் எல்லோரையும் சொல்லவில்லை வேலை செய்யாமால் இருக்கும் அந்த 90% ஊழியர்களை சொல்கிறேன்) அப்புறம் எப்படி லாபம் வரும்...
Rate this:
Share this comment
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
16-அக்-201912:54:22 IST Report Abuse
R KUMAR தமிழ் நாட்டில் இரண்டு பெரும் நிறுவனங்கள் உள்ளன. ஒன்று தமிழ் நாடு மின்சார வாரியம், மற்றொன்று அரசு போக்குவரத்து கழகங்கள். இரண்டும் மக்களுக்கும் சேவை செய்வதில்லை, அரசுக்கும் உண்மையாக இல்லை. அரசின் கஜானாவை காலி செய்வதில் இரண்டு நிறுவனங்களுக்குள்ளாகவும் போட்டி உள்ளது. மின்சார வாரியத்தில் உள்ள ஊழலை ஒழித்தாலே அரசுக்கு பெரிய நிம்மதி. ஒரு மின் இணைப்பு வாங்க எவ்வளவு லஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். போக்குவரத்து கழகங்களால் நிறுவப்பட்ட தண்ணீர் விற்பனை கூடங்கள், சிறிய பேரூந்துகள் ஆகியவை என்னவாயிற்று என்பது சில இடங்களில் தெரியவில்லை. சென்னை வடபழனி பேரூந்து நிலையத்தில் இருந்து வந்த தண்ணீர் விற்பனை நிலையத்தை மூடியாகிவிட்டது. ஆலந்தூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டுவந்த, குரோம்பேட்டையில் இருந்து இயங்கி வந்த சிறிய பேரூந்துகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஆனால் பொது மக்களுக்கு சேவை செய்வதாக மந்திரி அவ்வப்போது கூறுகிறார்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-அக்-201912:42:57 IST Report Abuse
Bhaskaran முதலில் குடிசைகளுக்கு இலவசமின்சாரம் என்பதை எடுக்கணும் சென்னையில் குடிசையில் எ.சி சலவை இயந்திரம் போன்ற அணைத்தும் வைத்துக்கொண்டு இலவச மின்சாரம் பயன் படுத்துகின்றனர்
Rate this:
Share this comment
Natarajan Dhanasekar - Bhopal,இந்தியா
16-அக்-201913:32:59 IST Report Abuse
Natarajan Dhanasekar100 unit free also humbumk that also has to be removed instead of that they can reduce the EB unit price, similarly they can purchase Soalr Power from individual houses, till date they are not encouraging this...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X