பாக்., செல்லும் நீரை தடுப்போம்: மோடி

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (85)
Share
Advertisement
pakistan, Modi,  water, PMModi, Narendra Modi, Hariyana,  பிரதமர் மோடி,  மோடி, தண்ணீர்,  பாகிஸ்தான்,

குருசேத்திரா: பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்துவதற்கான பணிகள் துவங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஹரியானாவில் நடந்த பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 70 ஆண்டுகளாக, இந்தியாவிற்கும், ஹரியானா விவசாயிகளுக்கும் சொந்தமான தண்ணீர் பாகிஸ்தானுக்கு பாய்ந்து கொண்டுள்ளது. இனி, அந்த நீரை தடுத்து நிறுத்தி, உங்கள் வீட்டிற்கு மோடி அரசு கொண்டு வரும். இதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டது. இந்த தண்ணீர் இந்தியாவிற்கு சொந்தமானது. ஹரியானா விவசாயிகளுக்கு சொந்தமானது. இதனால் தான் மோடி அரசு உங்களுக்காக போராடி வருகிறது. இவ்வாறு மோடி பேசினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
17-அக்-201911:30:14 IST Report Abuse
Kumar periyaar நாட்டின் நல்லது பானு நா பக்கத்துக்கு நாட்டை சொல்லி சொல்லி இங்கு வொன்னும் செய்ரது இல்லே, இருக்காரே பேங்க் லாம் திவாலா ஆகிட்டு இருக்கு. ஏன் தான் இப்படி மக்களை ஏமாந்து கிறராலோ
Rate this:
Cancel
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
17-அக்-201903:13:38 IST Report Abuse
Nagarajan Duraisamy பொதுமக்கள் இதை அங்கீகரிக்க கூடாது, ஒரு பகுதியின் நீரை திசை திருப்புவதால் அங்கு இயற்கை வளம், மனித வளம் பாதிக்கப்படும். பாலைவனமாகி விடும் இத்தகைய பகுதி மேலும் வன்முறையை தூண்ட உதவுமே தவிர பயன் தராது. இது போன்ற அரை குறை எண்ணங்களை வாக்குக்காக கூறினால், எல்லா நாடு மக்களுக்கும் இந்த தலைவர்களுடைய யோகா முகத்திரை விலகி, சூழ்ச்சி முகமே தெரியும். வெளியுறவு கொள்கைகளுக்கு பெரும் இடையூறு.
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
16-அக்-201920:05:07 IST Report Abuse
Charles அதைத்தான் பிஜேபியின் எட்டியூரப்பா செய்ய துடிக்கிறார். காவேரி நீரை தர மறுக்கிறார். தமிழர்களின் கதி நம்நாட்டுக்குள்ளேயே அப்படித்தானே இருக்கிறது. என்னை நிறைய பேர்கள் பெங்களூரில் ஏன் உனக்கு கன்னடம் தெரியவில்லை, உன் ஊருக்கு போ என்றல்லாம் பேசி இருக்கிறார்கள். அதுபோல் நாம் சென்னையில் பேசுவதில்லை என்று பெருமை படுகிறேன்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X