அயோத்தி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (76)
Advertisement
AyodhyaHearing, அயோத்தி, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய்,

புதுடில்லி: அயோத்தி வழக்கில் 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த இறுதி விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவான், ஹிந்து அமைப்புகள் தாக்கல் செய்த ஆவணங்கள், வரைபடங்களை கிழித்து எறிந்தார். மேலும், நீதிமன்றத்தை ஹிந்து அமைப்புகள் கேலிக்கூத்து ஆக்குவதாகவும் கூறினார். அந்த ஆவணத்தில், ராமர் பிறந்த இடம் குறித்த தகவல்கள் இருந்தன.

ஆவணம் கிழிக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கறிஞர்கள் இவ்வாறு நடந்து கொண்டால், நாங்கள் எழுந்து சென்றுவிடுவோம். இப்படி நடப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதே தவிர, பலன் ஏற்படாது. நீதிமன்ற அறையின் மாண்பை காக்க வேண்டும் எனக்கூறினார்.
உ.பி.,யின் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு தினசரி விசாரணை நடத்தி வருகிறது. 39 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையின் கடைசி நாளான இன்று தொடர்ந்து விசாரணை நடந்தது.




இந்த வழக்கு விசாரணை துவங்கியதும், ஹிந்து மகாசபாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், இந்த வழக்கில் வாதங்களை முன்வைக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறினார். ஆனால், இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், இந்த வழக்கில் மாலை 5 மணிக்கு முடிவடையும். முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும் மேலும் வாதங்கள் இருந்தால், அவற்றை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுங்கள் என்றார்.

இதனை தொடர்ந்து நிர்மோகி அஹாரா அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், ராமஜென்ம பூமி என்பது ஒன்றுதான். வேறு இடத்தை கூற முடியாது. முஸ்லிம்கள் எங்கு வேண்டுமானாலும் வழிபடலாம். ராமஜென்ம பூமியில் மட்டும் தான் ஹிந்துக்கள் வழிபட முடியும். சர்ச்சைக்குரிய நிலத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை இல்லை. 1934க்கு பிறகு முஸ்லீம்கள் அங்கு வழிபடுவதை நிறுத்தினர். ஹிந்துக்கள் தான் வழிபாடு செய்கின்றனர் எனக்கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.
இதன் இடையே, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு, பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் அடங்கிய ஆவணங்களை, அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.



தீர்ப்பு ஒத்திவைப்பு :


அயோத்தி வழக்கில் கடந்த 40 நாட்களாக தினமும் நடத்தப்பட்டு வந்த விசாரணை இன்று மாலை 4 மணியுடன் நிறைவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களும் விசாரித்து முடிக்கப்பட்டு விட்டது. இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நவம்பர் 17 ம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெறுவதால், அதற்கு முன்பாக இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
17-அக்-201900:51:39 IST Report Abuse
ashak ராமன் பிறந்த இடத்தை சரியாக குறிப்பிடமுடியாது என்று இந்துத்துவ தலைவர்களே சொல்லியுள்ளார்கள், மேலும் ஒன்பதுக்கு மேற்பட்ட இடத்தில் இங்கு தான் ராமர் பிறந்தார் என்று என்று கோவில் உள்ளது
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
17-அக்-201914:47:35 IST Report Abuse
Chowkidar NandaIndiaஆனால் இந்த இடம் தான் ஸ்ரீ ராமர் பிறந்தஇடம் என்று பல ஹிந்துமத தலைவர்கள், ஆச்சாரியர்கள் சொல்லியிருக்கின்றனர். அது சரி உங்கள் இறைத்தூதுவர் பூமிக்கு வந்து இறங்கியது எங்கிருந்து, எப்படி, எந்த இடத்தில், என்ன தேதியில் என்று கொஞ்சம் சொல்லலாமே. ஜெய் ஸ்ரீ ராம்....
Rate this:
Share this comment
Cancel
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
17-அக்-201900:08:11 IST Report Abuse
orange mittai பேசாம ஒரு அரசு பள்ளிக்கூடமோ , மருத்துவமனையோ கட்டுங்கப்பா.... வேணும்னா பக்கத்துல சின்ன கோவில், சர்ச், மசூதி கட்டுங்க...எப்படியும் நாலு திட்டு திட்டுவீங்க...அதையும் செய்யுங்கோ...
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
16-அக்-201922:28:21 IST Report Abuse
வல்வில் ஓரி டீம்கா டாபர்ஸும் ஏன் அரபி கூட சேர்ந்து குலைக்குது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X