கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீட்: 4250 பேரின் கைரேகை ஒப்படைக்க உத்தரவு

Added : அக் 16, 2019 | கருத்துகள் (2)
Advertisement
NEET exam,medical entrance test,நீட், சிபிஐ, சென்னை, ஐகோர்ட்,

சென்னை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் நடப்பு கல்வி ஆண்டு எம்.பி.பி.எஸ்., சேர்ந்த 4250 மாணவ, மாணவிகளின் கைரேகை பதிவுகளை ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

நீட் ஆள்மாறாட்ட வழக்கில், சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், தமிழகத்தை சேர்ந்தவர்கள், பிற மாநிலங்களிலும் தேர்வு எழுதியுள்ளனர். இந்த விவகாரத்தில் 19 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், இது மாநில அளிவிலான முறைக்கேடு இல்லை, இது தேசிய அளவிலான முறைக்கேடு. பிற மாநில தேர்வு மையங்களில் நீட் எழுதியிருப்பதால் ஏன் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக்கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும், நடப்பு கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ்., சேர்ந்த 4250 மாணவ, மாணவிகளின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
16-அக்-201916:18:10 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj நீட் தேர்வு தொடங்கிய ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள அத்துணை பேரின் கைரேகைகளை ஆய்வு செய்யவேண்டும் இந்த ஆண்டு மட்டும் ஆய்வு என்பது போலிகள் அநேகர் தப்பித்துக் கொள்ளக் காரணம் ஆகிவிடும்
Rate this:
Share this comment
Cancel
சர்வாதிகாரி சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
16-அக்-201914:36:31 IST Report Abuse
சர்வாதிகாரி சொடலை இவிங்களே நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயமில்லைனு சொல்லுவாய்ங்களாம் இப்போ இவிங்களே கைரேகையை குடுனு சொல்லுவாய்ங்களாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X