பொது செய்தி

இந்தியா

புகைக்குள் டில்லி: அவதியில் மக்கள்

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (9)
Advertisement

புதுடில்லி: தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிற நேரத்தில் தலைநகர் டில்லியை சூழ்ந்த புகை பெரும் பிரச்னையாகி உள்ளது.






இந்தியாவின் தலைநகர் டில்லியில் காற்று மாசுபாடு அடைந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். வேளாண் கழிவு புகையால், டில்லியை சுற்றியுள்ள குருகிராம், நொய்டா, பரிதாபாத் மற்றும் கஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மிகவும் மாசடைந்து புகைமூட்டமாக போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. குளிர் காலம் என்பதால் டில்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா, மாநில மக்கள் வைக்கோலை தீவைத்து குளிர் காய்வதாலும் காற்று மாசுபடுவதாக கூறப்படுகிறது.

காற்று தர அட்டவணைப்படி காற்றின் மாசு அளவு, 0 முதல் 50 புள்ளிகள் வரை நல்ல நிலை, 51 முதல் 100 வரை திருப்தியளிக்க கூடிய நிலை, 101 முதல் 200 வரை மிதமான நிலை, 201 முதல் 300 வரை மோசமான நிலை, 301 முதல் 400 வரை மிக மோசமான நிலை மற்றும் 401 முதல் 500 வரை தீவிரமான மாசு நிலை என வரையறுக்கப்படுகிறது.




அதன்படி, இன்று (அக்., 16) காலை 08.30 மணியளவில் மேற்கொண்ட ஆய்வில் டில்லி நகரம் முழுவதும் 309 புள்ளிகள் காற்று மாசின் தரம் இருந்துள்ளது. அதிகபட்சமாக துவாரகா பகுதியில் 480 புள்ளிகளுடன் தீவிரமான காற்று மாசு உள்ளது. மேலும், திர்பூர் - 314, டில்லி பல்கலைக்கழகம் - 313, சந்தினி சவுக் - 132, பூசா - 287 புள்ளிகளாக கணக்கிடப்பட்டுள்ளது.

டில்லியை ஒப்பிடும் போது மற்ற பெரும் நகரங்களான கோல்கட்டா, மும்பை, சென்னையில் காற்று மாசு குறைவாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-அக்-201922:16:00 IST Report Abuse
kulandhai Kannan இந்த விவசாயிகள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவேயில்லை. அரசியல்கட்சிகளும் வாய்மூடிமவுனிகள்.
Rate this:
Share this comment
Cancel
slrravi - coimbatore,இந்தியா
16-அக்-201920:22:32 IST Report Abuse
slrravi கருத்து எழுத ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டால் . பல பேர் கருத்து எழுத மாட்டார்கள் அல்லது நல்ல சரியான கருத்து எழுதுவார்கள்.
Rate this:
Share this comment
Rajesh - Chennai,இந்தியா
18-அக்-201902:26:47 IST Report Abuse
Rajeshநீங்க வேற நாடு எக்கேடாவது கேட்டு போகட்டும்னு, செய்தியே வாசிக்க மாட்டார்கள். நீங்க பிஜேபியில் சேர்ந்து மத்திய அமைச்சர் ஆகலாம்..........
Rate this:
Share this comment
Cancel
Mullai Satta Kuzhu - Chennai,இந்தியா
16-அக்-201920:07:23 IST Report Abuse
Mullai Satta Kuzhu கேப்பிடல காக்க வேண்டிய பொறுப்பு அனைத்து மக்களுக்கும் உண்டு அரசு சிறப்பான செயல் திட்டம் கொண்டு வந்து மாசு ஏற்படுவதை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் .மேலும் சென்னையில் மாசு இல்லாம இல்ல அதை கட்டுக்குள் கொண்டு வர இப்போதே நடவடிக்கை எடுக்கணும் இங்கு உள்ள மாசு கட்டுப்பட்டு துறை ஊழல் மிகுந்த துறையாக உள்ளதால் இது வரை எந்த நடவடிக்கையும் இது வரை சென்னை சுற்றியுள்ள மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மேல எடுப்பதில்லை .இதற்கு மேல நமது வாகன ஓட்டிகள் புகை வரும் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படுத்தும் புகையும் அதிகம் அதை இங்குள்ள அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பது எதிர் வரும் காலத்தில் சென்னை மக்களுக்கு சுற்று புற சீர்கேட்டால் பாதிப்பு ஏற்படும் .அரசு மற்றும் சுற்றுப்புற ஆர்வலர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மரம் வளர்ப்பதை உறுதிப்படுத்த வேண்டும் ..முல்லை சட்ட குழு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X