வெட்கமில்லாத எதிர்க்கட்சி: மோடி சாடல்

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
PM, Questions, Article 370,Maharashtra Link, எதிர்க்கட்சிகள், மோடி,


அகோலா: காஷ்மீர் சிறப்பு சட்டத்திற்கும், மஹாராஷ்டிராவுக்கும் என்ன தொடர்பு உள்ளது என வெட்கமில்லாமல் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மஹாராஷ்டிராவில் வரும் 21ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து அகோலா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
காஷ்மீர் சிறப்பு சட்டத்திற்கும், மஹாராஷ்டிராவுக்கும் என்ன தொடர்பு உள்ளது என வெட்கமில்லாமல் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. காஷ்மீருக்காக எதையும் தியாகம் செய்யும் மஹாராஷ்டிராவின் பெருமைக்குரிய குழந்தைகள் நாங்கள். ஆனால், அரசியல் லாபங்களுக்காக, காஷ்மீர் விவகாரம், மஹாராஷ்டிராவில் என்ன செய்யப்போகிறது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.


latest tamil news



சிவாஜி ஆட்சி செய்த நிலத்தில், இன்று அரசியல் லாபங்களுக்காக குரல் எழுப்பப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. காஷ்மீர் விவகாரம் இங்கு ஒன்றும் செய்யாது என எதிர்க்கட்சிகள் வெட்கமில்லாமல் கூறுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-அக்-201920:47:15 IST Report Abuse
ஆப்பு சிவாஜி மட்டும் சண்டையிட்டு ஜெயிச்சு வேற யாருக்கோ பட்டம் கட்டிட்டு போனாரா? அவருதானே ராஜாவா முடி சூட்டிக்கிட்டாரு?
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-அக்-201916:50:29 IST Report Abuse
Endrum Indian இது தான் முதல் சாம்பிள் "வெட்கமில்லாத எதிர்க்கட்சி" என்னும் வார்த்தை. அதுக்கப்புறம் பெரிய பெரிய ஆப்பாக எல்லா எதிர்க்கட்சிகளுக்கு சீக்கிரம் வரவேண்டும். வெறும் உளறல்கள் மட்டுமே இவர்களிடம் இருக்கின்றது ஆட்சியில் பங்கு பெற முடியாத ஆதங்கத்தில். மக்களுக்காக இந்த எதிர்க்கட்சிகள் ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை வெறும் அவர்கள் பை நிரம்ப மாட்டேன் என்கிறதே இந்த பி ஜெ பி ஆட்சியில் என்று வெறியில் தான் இந்த உளறல்கள்.
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
16-அக்-201916:49:32 IST Report Abuse
தமிழர்நீதி எதிர்க்கட்சிகள் மோடியை வில்லனாக்கி விட்டார்கள் , பாவம் நடிகர் ஹீரோவாக பார்க்கிறார் . எதிரிகள் காற்றில் சிலம்பம் சுற்ற விட்டுள்ளார்கள் மோடியை . வாயும் கையும் வடை வீரருக்கு வலிக்கிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X