மன்மோகன் ஆட்சியில் வங்கித்துறை மோசம் : நிர்மலா சீதாராமன்

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (67)
Advertisement

நியூயார்க் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் காலத்தில் இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் மிகவும் மோசமடைந்திருந்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.







நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலை.,யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், ரகுராம் ராஜன் மிகச் சிறந்த திறமைசாலி. அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. அவர் ஆர்பிஐ கவர்னராக இருந்த போது இந்திய பொருளாதாரம் அனைத்து வகைகளிலும் சிறப்பாக உள்ளது என்ற மிதப்பில் இருந்தார். தனக்கு வேண்டிய தலைவர்கள் போனில் அழைத்து சொல்வதன் அடிப்படையிலேயே அவர் காலத்தில் வங்கி கடன்கள் வழங்கப்பட்டன. பொதுத்துறை வங்கிகளை இன்று வரை அதளபாதாளத்தில் இருந்து மீட்பதே அரசின் மிகப் பெரிய முயற்சியாக இருந்து வருகிறது.




மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, இந்தியா பற்றிய தெளிவான பார்வை இல்லாத மன்மோகனின் வார்த்தையை மட்டுமே ரகுராம் ராஜன் ஆமோதித்து கொண்டிருந்தார். நான் யாரையும் கிண்டல் செய்ய விரும்பவில்லை. மன்மோகன் - ரகுராம் ராஜன் காலத்தில் இருந்ததை போன்று அதற்கு முன் பொதுத்துறை வங்கிகள் இந்த அளவிற்கு மோசமாக இருந்தது இல்லை. இதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
19-அக்-201901:47:00 IST Report Abuse
ashak இந்த அம்மா சொல்வது
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-அக்-201901:22:12 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ எதுக்கு இந்தம்மா பதவிக்கு வந்தவுடன், அந்த முண்டாசுக் காரரை போயி பார்த்துட்டு வரனும். ? பின்னால காலை வாருறதுக்கா ?
Rate this:
Share this comment
Cancel
Balaji - Chennai,இந்தியா
17-அக்-201900:57:38 IST Report Abuse
Balaji பார்லி ஜி 19 % லாபமாம்? வரும்படி ஆறு சதம் தாஸ்தி ஆகிருக்காம்? பிசுக்கோத்து விக்கமாட்டேங்கிநாய்ங்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X