பொது செய்தி

இந்தியா

ஆப்பிளுக்கு போட்டி: கூகுளின் நவீன போன்

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (8)
Advertisement

புதுடில்லி: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் புதிய தொழிநுட்பத்துடன் கூடிய குறைந்த விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. நியூயார்க்கில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.






கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 XL ஸ்மார்ட் போன்கள் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பிக்சல் 4 ஸ்மார்ட் போனில் 5.7 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன், பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இரு டிஸ்ப்ளேக்களிலும் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.




இரண்டு மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் 3 ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. அத்துடன் கூகுள் உருவாக்கிய டைட்டன் எம் செக்யூரிட்டி சிப் இணைக்கப்பட்டுள்ளது.

12.2 எம்பி கேமரா, 16 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர போட்டோக்களை அழகாக்கும் புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய பிக்சல் 4 ஸ்மார்ட் போன்களில் மோஷன் சென்ஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது அசைவுகளை அறிந்து செயல்படும் திறமை இந்த போனுக்கு உண்டு




பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி வெர்ஷன் விலை 799 டாலர்கள் எனவும், 128 ஜிபி மாடல் விலை 899 டாலர்கள் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் விலை 899 வாலர்கள் எனவும், 128 ஜிபி மாடல் விலை 999 டாலர் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் அக்.,24 ம் தேதி விற்பனைக்கு வருகிறது. விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Sekar - mumbai ,இந்தியா
16-அக்-201920:09:25 IST Report Abuse
Ram Sekar என்றும் இந்தியன் - சரியான கருத்து. android போன்களில் விலை அதிகமானது என்று கூகுள சொல்லவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
16-அக்-201919:07:59 IST Report Abuse
blocked user ஓசியில் software என்றால் இனிக்கத்தானே செய்யும். ஆனால் தகவல்களை வேறு யாராவது எடுத்து விளையாடிவிட வாய்ப்பு அதிகம்.
Rate this:
Share this comment
Cancel
HSR - MUMBAI,இந்தியா
16-அக்-201917:23:45 IST Report Abuse
HSR தினமலரே 56000 உங்களுக்கு மலிவு விலையா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X