நம்பிக்கை இழக்காத மோமென்.

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019
Advertisement









இரண்டு கால்களும் இல்லாத நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கையில் இரண்டு கேமிராக்களை வைத்துக் கொண்டு படமெடுப்பதற்காக பயணிக்கும் அவரது படத்தைப் பார்த்த உடனேயே அவரைப்பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.






மொமென் கிரேகா என்பது அவரது பெயர் தற்போது 32 வயதாகிறது பாலஸ்தீனத்தை சேர்ந்த புகைப்பட நிருபர்.






சிறுவயது முதலே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம், 2008-ம் ஆண்டு காசாவிற்கு கிழக்கு பகுதியில் படம் எடுத்துக் கொண்டு இருந்த போது இஸ்ரேல் விமானம் வானத்தில் இருந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியது,அந்த தாக்குதலில் இவரும் பாதிக்கப்பட்டார், இரண்டு கால்களையும் இழந்துவிட்டார்.

கால்களை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை, கொஞ்ச நாளில் சக்கர நாற்காலியில் மீண்டும் படமெடுக்க கிளம்பிவிட்டார்.படமெடுப்பது என்றால் பூ.செடி,வானம்,கடல் என்று இயற்கையையோ அல்லது திருமணம் கடைதிறப்பு போன்ற விசேஷங்களையோ எடுப்பதல்ல இவர் பாணி, தெருவில் நடக்கும் போராட்டம் ஆர்ப்பாட்டம் எனறு நெருப்பு பொறி பறக்கும் இடங்களில்தான் இவரது கேமிராவிற்கு தீனி கிடைக்கும் காரணம் இவர் பல பத்திரிகைகளுக்கும் படங்களை கொடுக்கும் ‛ப்ரீலான்ஸ்' போட்டோகிராபராவார்.

உலகின் மிகச்சிறந்த போட்டோ ஜர்னலிஸ்ட்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ள இவருக்கு மனைவி கொடுக்கும் தைரியமும் மகள் கொடுக்கும் சந்தோஷமும்தான் பெரிய டானிக்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in





Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X