பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த குழுக்கள் அமைக்க அரசு உத்தரவு

Added : அக் 16, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
டெங்குகாய்ச்சல், கட்டுப்படுத்த, குழுக்கள், அமைக்க, உத்தரவு

சென்னை:வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக குழுக்களை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பல இடங்களில் பரவி வருகிறது. தேங்கும் மழைநீரில் டெங்கு கொசு உற்பத்திக்கு அதிக வாய்ப்புள்ளதால், கொசுக்களை ஒழித்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. தமிழகம், பாண்டிச்சேரியில் பரவலாக மழை பெய்யும், 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளில் மண்டல அளவில் குழுக்களை உடனடியாக அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்காலிகமாக கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமனம், பள்ளி மாணவர்களை சுகாதார துாதுவர்களாக நியமிக்க ஏற்பாடு நடக்கிறது. இந்த குழுக்களை உடனடியாக அமைத்து இரு வாரங்களில் தெரிவிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
17-அக்-201920:03:50 IST Report Abuse
 Sri,India முதலில் அரசு அலுவலகங்களில் தூய்மை பணி நடத்தி ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் . கொசு உற்பத்தி செய்யுமிடமாக ஆசு அலுவலகங்கள் உள்ளன .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X