பொது செய்தி

தமிழ்நாடு

அக்.25ம் தேதி முதல் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு

Added : அக் 16, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
 25, முதல் , அரசு டாக்டர்கள், வேலை, நிறுத்தம்

சென்னை: வரும் 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சேலத்தில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளது. உயிர்காக்கும் அவசர கால சிகிச்சை பிரிவு மற்றும் காய்ச்சல் சிகிச்சை பிரிவு போன்றை பாதிக்காத வகையில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் . இந்த போராட்டத்தில் 16 ஆயிரம் அரசு டாக்டர்கள் பங்கு பெறுவர் . இவ்வாறு அவை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
17-அக்-201908:50:01 IST Report Abuse
padma rajan இவர்கள் தனியாக கிளினிக் வைத்துள்ளார்கள் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளை தங்களுடைய கிளினிக்கில் வந்து சந்திக்கும்படி கூறுகிறார்கள் தனியாக மருந்துக்கடை வைத்துள்ளார்கள் மருத்துவமனை சம்பந்தப்பட்ட உபகரணங்கள் விற்பனை செய்கிறார்கள் இன்னும் என்ன கேடு இவர்களுக்கு.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-அக்-201908:27:51 IST Report Abuse
ஆரூர் ரங் மாநில அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்து மருத்துவ ஆலோசனை மட்டும் கூற விதிவிலக்குண்டு ஆனால் அவர்கள் பெரிய கார்பொரேட் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகூட செய்து சம்பாதிக்கிறார்கள். அதன்காரணமாக பின்னர் உடல்நலம் சரியில்லை எனக்கூறி விடுப்பும் எடுக்கிறார்கள் .அவர்களுக்கு அரசு மருத்துவமனைப்பணி இரண்டாம் பட்சம்தான் .மூத்த மருத்துவர்கள் இப்படி செய்வதால் எல்லாப்பணிச்சுமையும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தலையில் விழுந்து தொடர்ந்து முப்பத்தாறு மணிநேரம்கூட பணிசெய்ய வேண்டியுள்ளது .பலர் பணிச்சுமைதாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள் .அதிக பணிச்சுமை என .ஆட்சேபித்தால் மூத்தமருத்துவர்கள் இவர்களுக்கு அறுவை சிகிச்சை போன்ற பயிற்சிகளை அளிக்காமல் வாட்டுகிறார்கள் . இவர்களுக்குள்ளே இவ்வளவு பிரச்னை வைத்துக்கொண்டு வேலை நிறுத்தமா? டாக்டராக ஆசைப்படுபவர்கள் நீட் எழுதுமுன் ஓரிரண்டு பயிற்சி மருத்துவர்கள் பட்டமேற்படிப்பு மாணவர்களைக்கண்டு பேசிவிட்டு பிறகு முடிவு செய்யலாம் . இன்னொன்று அரசு மருத்துவர்கள் சொந்த சிறு கிளினிக் தவிர வேறு மருத்துவமனைகளில் பகுதி நேரமாகப் பணியாற்றுவது முற்றிலும் தடை செய்யப்படவேண்டும்
Rate this:
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
16-அக்-201920:44:35 IST Report Abuse
K. V. Ramani Rockfort அரசு சம்பளத்தை கணிசமாக வாங்கும் இவர்கள், வேலை நாட்களில் அரசு மருத்துவ மனைகளுக்கு வரும் வெளி நோயாளிகளையும், அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உள் நோயாளிகளையும் பொறுப்புடன் கவனித்து, அவர்களுக்கு சிறந்த மருத்துவம் அளிக்கிறார்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X