அரசு அதிகாரிகளுக்கு லீவு இல்லை: உ.பி., அதிரடி

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (2)
Advertisement

லக்னோ: வரும் நவம்பர் மாதம் 30 ம் தேதி வரையில் அரசு அதிகாரிகளுக்கு லீவு இல்லை என உ.பி., அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.





இது குறித்து உ.பி., அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
வரும் நாட்களில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ந்து வருகின்றன. மேலும் சுப்ரீம் கோர்ட்டில் அயோத்தி வழக்கு விசாரணை முடிந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின்தலைமை நீதிபதிரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் மாதம் 17 ம் தேதிக்குள் ஓய்வு பெறுகிறார். அதற்குள்ளாக அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது.






இதனையடுத்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அனைத்துதுறை அரசு அதிகாரிகள் அனைவரும் வரும் நவம்பர் 30 ம் தேதி வரை விடுமுறை எடுக்க கூடாது.அவர்கள் அனைவரும் மாவட்டங்களை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், அவசர காலத்திற்கு மட்டுமே விடுப்பு அனுமதிக்கப்பட வேண்டும் என அந்த உத்தரவில் கூறி இருப்பதாக அரசின் செய்தி தொடர்பாளர் கூறினார்.அயோத்தி தீர்ப்பு காரணத்தை கூறி மாவட்ட நீதிபதி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர்அயோத்தி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் வரையில் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-அக்-201917:19:33 IST Report Abuse
Malick Raja தன்னைப்போன்றே அரசுஅலுவலர்கள் வாழவேண்டும் என்று சொன்னால் மட்டுமே சரியாக இருக்கும் .. அல்லது அதற்க்கு முன்னோட்டமாக லீவு இல்லை என்று சொல்லி இருக்கலாமோ ?
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
17-அக்-201905:21:53 IST Report Abuse
 nicolethomson என்னவோ நடக்குது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X