பி.எம்.சி., வங்கி மோசடி: மாஜி இயக்குனர் கைது

Updated : அக் 16, 2019 | Added : அக் 16, 2019 | கருத்துகள் (7)
Advertisement
PMC Bank,Director,Arrested,Scam,வங்கி மோசடி,மாஜி இயக்குனர், கைது

மும்பை: பல்லாயிரம் கோடி ரூபாய், பி.எம்.சி. வங்கி மோசடி வழக்கில், மாஜி வங்கி இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிராவில், பி.எம்.சி., எனப்படும் பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூ.4,355 கோடி மோசடி நடந்து வெளிச்சத்திற்கு வந்தது.

வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால். வங்கியில் செய்துள்ள தங்களுடைய முதலீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதலீட்டு பணம் கிடைக்காத அதிர்ச்சியில் இதுவரை மூன்று பேர் இறந்துள்ளனர்.





இந்நிலையில் வங்கியின் முன்னாள் தலைவர் சுர்ஜித்சிங் அரோரா என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இந்த மோசடி தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சுர்ஜித்சிங் அரோரா பி.எம்.சி. வங்கியின் கடன் வழங்கும் பிரிவு கமிட்டியின் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளதும், கடன் வழங்கியதில் நடந்த முறைகேடிற்கு இவர் தான் முக்கிய காரணம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சுர்ஜித்சிங் அரோராவிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் படையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENNAVAN - CHENNAI,இந்தியா
20-அக்-201915:35:16 IST Report Abuse
THENNAVAN மன்மோகன் நேர்மையானவர் ,ஆனால் அவரை சொல்லி,அவரை சுற்றி இருந்தவனெல்லாம் இப்படி வேசம்போட்டு கொள்ளை அடிச்சிருக்கானுகளே இப்போ நாம என்ன செய்ய (காமராஜருக்கு இதே நிலைமைதான் மற்றவன் எல்லோரும் கள்ளநோட்டு அடிச்சானுகளே அதுபோலத்தான் இதும் )
Rate this:
Share this comment
Cancel
eee -  ( Posted via: Dinamalar Android App )
17-அக்-201910:27:24 IST Report Abuse
eee மகாராஷ்டிரா தேர்தலுக்காக இது. காவிகள் இந்த தேர்தலில் இருந்து ஓரம் கட்டப்படும்
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
17-அக்-201909:49:37 IST Report Abuse
Apposthalan samlin ஈராக் இல் எவனும் பயந்து வங்கியில் பணம் போட மாட்டான் ஒரு நேரத்தில் வங்கி திவாலாகி பணம் மொத்தமும் போச்சு இன்னும் பணம் எவனுக்கும் கிடைக்க வில்லை . இந்தியாவிலும் இந்த நிலைமை வருமோ என்று பயமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X