மூணாறில் குழந்தையை மீட்ட ஆட்டோ டிரைவருக்கு குவியுது பாராட்டு

Added : அக் 16, 2019 | கருத்துகள் (7)
Advertisement
மூணாறில் குழந்தையை மீட்ட ஆட்டோ டிரைவருக்கு குவியுது பாராட்டு

மூணாறு, : கேரளா, மூணாறு அருகே ஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தையை மீட்ட ஆட்டோ டிரைவர் கனகராஜுக்கு 61, பாராட்டுகள் குவிகின்றன.இடுக்கி மாவட்டம் முரிக்காசேரி அருகே முள்ளிரிக்குடி பகுதியைச் சேர்ந்த சபீஷ், குடும்பத்தினருடன் பழநி கோயிலுக்கு கடந்த செப்.,8ல், ஜீப்பில் சென்று விட்டு திரும்பினார். அவரது மனைவி சத்யபாமா மடியில் இருந்து ஒரு வயது மகள் ரோஹிதா, மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட ராஜமலைக்குச் செல்லும் நுழைவு பகுதியான ஐந்தாம் மைலில் இரவு 9:45 மணிக்கு தவறி ரோட்டில் விழுந்தது. அதனை அறியாமல் 50 கி.மீ., துாரம் பயணித்த பிறகு தான் குழந்தை காணாமல் போனது தெரியவந்தது.மீட்புஅக்குழந்தையை, ஐந்தாம் மைலில் பணியில் இருந்த வனத்துறை பணியாளர்கள் மீட்டதாக தெரிவித்தனர். ஆனால் மூணாறு போலீசார் நடத்திய விசாரணையில், நயமக்காடு எஸ்டேட், வெஸ்ட் டிவிஷனைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கனகராஜ் குழந்தையை மீட்டது கடந்த வாரம் தெரியவந்தது. இதுகுறித்த செய்தி நாளிதழ்களில் வெளிவந்ததால் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. அவரது ஆட்டோவில் பயணம் செய்த மாலத்தீவு உட்பட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி வருகின்றனர். பணம் கொடுப்பதற்கு வங்கி கணக்கு எண்ணை கேட்ட சிலரிடம் மறுத்து விட்டார்.அவர் கூறியதாவது: சம்பவத்தன்று ஐந்தாம் மைலில் வனப்பணியாளர் இரவு 9:45 மணிக்கு ஆட்டோவை நிறுத்தினார். அதே பகுதியில் 2012ல், என்னுடைய ஆட்டோவை இரவில் காட்டு யானை சேதப்படுத்தியதால், யானையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அச்சத்துடன் நிறுத்தினேன். அவர் ரோட்டில் பூனை போன்று உருவம் ஊர்ந்து வருவதாக தெரிவித்ததால் அருகில் சென்றபோது மலையாளத்தில் அம்மே' (அம்மா) என அழைத்ததால், அதிர்ச்சி அடைந்த நான் குழந்தை என்பதை உறுதி செய்து கொண்டு துாக்கினேன்.அதன் உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது. அதனை துடைப்பதற்கு துணி இல்லாததால் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி துணி கேட்டபோது, டிரைவர் போர்வையை கொடுத்து உதவினார். வனத்துறையினர், போலீசார் வந்தவுடன் குழந்தையை ஒப்படைத்து விட்டு வீட்டிற்குச் சென்று விட்டேன், என அந்த நெகிழ்ச்சியான தருணத்தை நினைவு கூர்ந்தார்.குழந்தையை வனத்துறையினர் மீட்டதாக, அவர்களுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடு நடந்தது. தற்போது அது கைவிடப்பட்டதால், கனகராஜை கவுரவப்படுத்த, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
22-அக்-201913:54:35 IST Report Abuse
Balaji இவரது செயலை பாராட்டி கவுரவப்படுத்த வேண்டியவர்கள், அந்த பாராட்டுகளையும் கவுரவங்களையும் நாமே நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என்ற நப்பாசை பொய்த்துப்போனது... அண்ணனுக்கு பாராட்டுகளும் வெளிநாடுகளிலிருந்து வங்கி கணக்கு எண்ணை தர மறுத்ததற்கு இவருக்கு உயரிய விருது வழங்கி கவுரவப்படுத்த வேண்டும் அரசு.......
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
21-அக்-201905:50:06 IST Report Abuse
 nicolethomson கேரளா வனத்துறையினர் எப்பவுமே உண்மையா பேசவே மாட்டாங்களா?
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
21-அக்-201903:46:58 IST Report Abuse
vasumathi பூனை போல ஊர்வதாக சொல்லி கவனத்தை ஈர்த்த வன அலுவலரும் ஒரு காரணமே. கடவுள் அனைவருக்கும் அருள் செய்யட்டும். பெற்றோர்கள் ?? இங்கு இருப்பதுபோல பூஸ்டர் சீட் சைல்ட் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X