சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் ரயில் இன்ஜின் டிரைவர்கள் போராட்டம் சரக்கு ரயில் பணிக்கு செல்லவில்லை

Added : அக் 16, 2019
Share
Advertisement
மதுரையில் ரயில் இன்ஜின் டிரைவர்கள் போராட்டம் சரக்கு ரயில் பணிக்கு செல்லவில்லை

மதுரை, :சரக்கு ரயில்களில் பணிக்கு சென்றால் ஓய்வு எடுக்க மூன்று நாட்களாவதாக கூறி மஸ்துார் யூனியன் ஓடும் தொழிலாளர் சங்கத்தினர் மதுரையில் மருத்துவ விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சரக்கு ரயில்களையும் இயக்க மறுத்தவர்கள், கோட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.சரக்கு ரயில்களில் இன்ஜின் டிரைவர் பணிக்கு சென்றால் 36 மணி நேரத்தில் மீண்டும் திரும்பி விட வேண்டும். ஆனால் புதிதாக விடும் ரயில்களுக்கு ஏற்ப இன்ஜின் டிரைவர்கள் இல்லாததால் பணிக்கு செல்லும் இன்ஜின் டிரைவர்கள் 3 நாட்கள் கழித்து தான் திரும்புகின்றனர். இதனால் அதிக பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும் பயணிகள் ரயில்களில் ஏழு மணி நேரம் பணிபுரியும் டிரைவர்களே சண்டிங்' பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதை கண்டித்து ஓடும் தொழிலாளர்கள் மருத்துவ விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோட்ட செயலாளர் அழகுராஜா தலைமையில் மஸ்துார் யூனியன் கோட்ட செயலாளர் ரபீக், உதவி செயலாளர் ராம்குமார், நிர்வாகிகள் ரவிசங்கர், நாகராஜன், கருப்பையா, முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால் சரக்கு ரயில்களை இயக்க இன்ஜின் டிரைவர்கள் செல்லவில்லை. கோட்ட ஊழியர் நல அலுவலர் சுதாகரன் அவர்களுடன் பேசியதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X