சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.20 ஆயிரத்திற்காக மதுரை தம்பதி கொலை கைதான வாலிபர் வாக்குமூலம்

Added : அக் 16, 2019 | கருத்துகள் (8)
Advertisement
ரூ.20 ஆயிரத்திற்காக மதுரை தம்பதி கொலை கைதான வாலிபர் வாக்குமூலம்

வெள்ளகோவில் வெள்ளகோவில் அருகே தம்பதியை கொலை செய்தவர் '20 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக கொலை செய்ய ஒப்புக்கொண்டேன்' என வாக்குமூலம் அளித்துள்ளார்.மதுரை ஆரப்பாளையம் மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்த தம்பதி செல்வராஜ் வசந்தாமணி. இவர்களது மகனின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக 10ம் தேதி திருப்பூர் மாவட்டம் உத்தண்டகுமாரவலசில் வசிக்கும் உறவினர் கண்ணம்மா வீட்டுக்கு சென்றனர்.அப்போது பூர்விக சொத்து விற்றதில் ஏற்பட்ட தகராறில் கண்ணம்மா அவரது மருமகன் நாகேந்திரன் நண்பரான ஈரோடு மீனவர் காலனியைச் சேர்ந்த இளங்கோ ஆகியோர் தம்பதியை கொன்று புதைத்தனர்.
கண்ணம்மா நாகேந்திரன் ஆகியோர் 14ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று இளங்கோ 27 கைதானார்.இளங்கோ போலீசில் அளித்த வாக்குமூலம்: செல்வராஜ் தலை மீது கிரைண்டர் கல்லை போட்டு நாகேந்திரன் கொன்றார். வசந்தாமணி சத்தம் போட்டபோது கண்ணம்மாவும் நாகேந்திரனும் அவரைப் பிடித்துக்கொள்ள நான் அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றேன்.எனக்கும் நாகேந்திரனுக்கும் 15 ஆண்டு பழக்கம். மீன் கடையில் வேலை பார்த்து வந்தேன். கொலை செய்வதற்காக 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பதாக கூறியதால் வந்தேன். ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்கவில்லை.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
21-அக்-201915:42:37 IST Report Abuse
s.rajagopalan ஆசிரியரே ஒரு தாழ்மையான வேண்டுகோள். இந்த 'அவர் 'இவர் ' என்ற மரியாதையை இத்தகைய மிருகங்களுக்கு கொடுத்து இந்த 'ர் ' ஐ கொச்சை படுத்துவதை தயவுசெய்து நிறுத்துங்களேன். ப்ளீஸ் குற்றவாளி என்று ருசுவான பின் இந்த போலி மரியாதை எதற்கு ?
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20-அக்-201905:52:32 IST Report Abuse
skv srinivasankrishnaveni இருபதாயிரக்காக கொலை செய்தானே இப்போது இவனுக்கு தூக்குத்தண்டனை கிடைக்கும் ஆர் ஆயுள்தண்டனை என்று தீர்ப்புவரும் என்னாத்தை கொண்டுபோய உழைச்சு சேர்த்தவர்கள் னான் ஏண்டா திருடிப்பிலைக்கும் நாய்களா வேலைசெய்ய துப்பிள்ளே எவனுக்கும் கேட்டால் வேலை கூட்டுஎவனும் தரலேன்னு சொல்லுவானுக வெட்கமாயில்லீங்களா எவனோகாலம் காலமா உழைச்சு குருவியாட்டம் சேர்த்தப்பணத்தை நகைகளை கொள்ளை அடிக்கும் திருடாளுக்கெல்லாம் மனசாட்சியே இருக்காதா ?/இதைவிடக்கேவலம் சில காவல்துறையே இருக்கும் நபர்கள் இந்தகூளையரிடம் கொலைகாராளிடமும் காசுவாங்குவது
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-அக்-201916:37:09 IST Report Abuse
Lion Drsekar முன்பெல்லாம் சாமி கண்ணைக்குத்தும் என்று பயமுறுத்தி வைத்திருந்தார்கள் எல்லோர்க்கும் ஒரு பயம் இருந்தது, இப்போது சாமியும் இல்லை, சுய மரியாதை என்ற பெயரில் இவர்களுக்கு இவர்களே மரியாதை கொடுத்துக் கொண்டு, எவைகளுக்கெல்லாம் எதிர்த்து குரல் கொடுத்தார்களோ அதையே தங்களின் சிலைகளுக்கு வைத்துக்கொண்டு கும்பிட்டு வருபவர்களால், வந்த வினைதான்?? பயம் என்பதே இல்லாமல் போய் எப்படியும் வாழலாம், எதையும் செய்யலாம் என்று வாழ ஆரம்பித்துவிட்டார்கள், மேலும் இது போன்ற தவறு செய்பவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அங்கேயும் இவர்களது கைகள் மேலோங்கி இருப்பதால் அங்கும் இவர்கள் இராஜ்யமாகிப்போனது . ஒன்று அந்த இறைவன் அல்லது இயற்கைதான் இதற்க்கு ஒரு முற்று புள்ளி வைக்கவேண்டும், நல்லதைச் சொன்னால் நீ நிஜமாகவே மருத்துவரா வயதுக்கு தகுந்த கருத்தாக இல்லையே என்று சாடல், நமக்கு நல்லது என்று படுவது சிலருக்கு கொலை வெறியைத் தூண்டுகிறது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
19-அக்-201901:12:39 IST Report Abuse
ashakஇது எல்லோருக்கும் பொருந்துமே,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X