அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோத்தபய ராஜபக்சே பேச்சு ராமதாஸ் கடும் கண்டனம்

Added : அக் 16, 2019 | கருத்துகள் (2)
Advertisement
கோத்தபய ராஜபக்சே பேச்சு  ராமதாஸ் கடும் கண்டனம்

சென்னை,:'இலங்கை தமிழர்களுக்கு எதிராக, கோத்தபாய ராஜபக்சேவின் திமிர் பேச்சு கண்டிக்கத்தக்கது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:இலங்கை அதிபர் தேர்தலில், நான் வெற்றி பெற்றால், இலங்கை போர் குற்றங்கள் குறித்த, அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்படும். சிங்கள போர்ப் படையினர், குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவர் என, அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். அவரின் திமிர் பேச்சு கண்டிக்கத்தக்கது.ராஜபக்சே சகோதரர்கள் நடத்திய போர்க் குற்றங்களும், அக்கிரமங்களும் உலகம் அறிந்தவை. அப்படிப்பட்ட ஒரு போர்க் குற்றவாளி, அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன், தமிழர்களை அச்சுறுத்தி, சிங்கள இனவெறியை துாண்டுகிறார். அவர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால், இலங்கையில், தமிழர்கள் வாழவே முடியாத நிலை ஏற்பட்டு விடும்.இந்த விஷயத்தில், இந்தியா தலையிட்டு, கோத்தபய ராஜபக்சேவின் நிலைப்பாட்டிற்கு, கண்டனம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
17-அக்-201914:51:14 IST Report Abuse
s.rajagopalan ராஜபக்சே இனவெறியன் தான் ...ஆனா நீங்க அதை சொல்ல கூடாது ....அந்த 'ஏழு' ராஜீவ் கொலையாளிகளுக்கு போனால் போகிறதென்று மரண தண்டனையை ரத்து செய்த பிறகு , அவர்களை ஆயுள் தண்டனையிலிருந்தும் விடுவிக்க வேண்டும் என்று விடாமல் வற்புறுத்துகிறீர்களே ...ராஜீவ் தமிழன் அல்ல ...வடக்கத்தியான் என்பதால்தானே ? அது நியாயமென்றால் ராஜபக்சே சொல்வதும் நியாயம்தான். இதில் என்ன கொடுமை என்றால் ...இந்த பே ...றறிவாளன் 'நான் நிறபாராதி என்று கூசாமல் சொல்வதுதான். வழக்கை விசாரித்த கார்த்திகேயன் என்ன சிங்களவரா ? தமிழன்தான் ?
Rate this:
Share this comment
rajaraja cholan MA M.Phil - ciyt,மொராக்கோ
23-அக்-201915:26:37 IST Report Abuse
rajaraja cholan MA M.Philகொலை செய்திருந்தாலும் தண்டனை காலம் முடிந்தும் ஏன் சிறை...??? விடுவிக்க வேண்டியதுதானே......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X