பொது செய்தி

தமிழ்நாடு

கலாமின் 88 படங்கள் 7 மணி நேரத்தில் வரைந்த மாணவர்

Added : அக் 17, 2019
Advertisement
 கலாமின் 88 படங்கள் 7 மணி நேரத்தில் வரைந்த மாணவர்

மாதவரம்:மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இளமை பருவம் முதல், அரசு விழா மேடையில், அவர் உயிரிழந்தது வரையிலான ஓவியங்களை, ஏழு மணி நேரத்தில், இடைவிடாது வரைந்து, தனியார் பள்ளி மாணவர், உலக சாதனை புரிந்தார்.

மனிதனின் சின்னஞ்சிறு உணர்வுகளையும், தென்றலாய் வெளிப்படுத்தும் அற்புத கலைகளில், ஓவியம் முக்கியத்துவமானது. இன்றைய நவீன புகைப்பட கலைக்கு அடிப்படையான, ஓவியக்கலை மூலம், சூரப்பட்டு வேலம்மாள் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் பார்கவ் வாசு, 14, புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சென்னை அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்தவர் வாசு சீதாராமன்; வெளிநாட்டில் வேலை செய்கிறார். அவரது மனைவி லதா; அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.அவர்களது மகன் பார்கவ். தன், 4 வயது முதல், ஓவியத்தில் ஆர்வம் கொண்ட அவருக்கு, திறமையான ஓவிய ஆசிரியர்களின், 'வழிகாட்டல்' உற்சாகமாய் அமைந்தது.

அந்த வகையில், நேற்று முன்தினம், மாதவரம் அடுத்த சூரப்பட்டில், 'அனிமா வேர்ல்டு ஆப் ஆர்ட்ஸ்' என்ற அமைப்பும், அப்துல் கலாம் ஆர்வலர்களும் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், 88வது பிறந்த நாள் உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தின.அதில், மாணவர் பார்கவ், அப்துல் கலாமின் இளமை பருவம் முதல், அரசு விழா மேடையில், அவர் உயிரிழந்த சம்பவம் வரையிலான, 88 ஓவியங்களை, காலை, 9:45 மணி முதல் மாலை, 4:45 மணி வரை, 7 மணி நேரத்தில், இடைவிடாது வரைந்தார்.

அவர், பிளாக் மார்க்கரை பயன்படுத்தி, 3 முதல், 4 நிமிடங்களில், ஓர் ஓவியம் வீதம், 88 ஓவியங்களை வரைந்து முடித்தார். சாதனையை நிறைவேற்றும் வரை, தண்ணீர் குடிக்க கூட, அவர் நேரம் ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து, அவருக்கு, மலேஷியாவை தலைமையிடமாக கொண்ட, 'யூனிகோ வேர்ல்டு ரெக்கார்டு' நிறுவனம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியது.

அந்த நிறுவனத்தின் தீர்ப்பாளர் ஆர்.சிவராமன், சாதனையை பதிவு செய்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர், நண்பர் மற்றும் பார்வையாளர்கள், மாணவர் பார்கவை பாராட்டினர்.

எங்கள் மகனுக்கு சிறு வயது முதல், ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. அதை முறைப்படுத்தினோம். கடந்தாண்டு, செப்டம்பரில், வேளச்சேரியில் உலக சாதனை நிகழ்வு நடந்தது. அதில், காலை, 10:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, 13 மணி நேரம், உணவு, தண்ணீர் ஏதுமின்றி, 165 பேரை, தனித்தனி ஓவியமாக வரைந்து, சாதனை படைத்தான். அவனது சாதனை தான் எங்களின் உலகம்.

பார்கவின் பெற்றோர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X