பொது செய்தி

தமிழ்நாடு

'கல்கி' ஆசிரமங்களில் சோதனை

Updated : அக் 18, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
'கல்கி' ஆசிரமங்களில் சோதனை

சென்னை:தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள, கல்கி பகவான் ஆசிரமங்களுக்கு சொந்தமான, 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரி துறையினர், அதிரடி சோதனை நடத்தினர்.இதில், கணக்கில் வராத, 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள, வரதய்ய பாளையத்தில், கல்கி பகவான் ஆசிரமம் அமைந்துள்ளது.இதன் கிளைகள் மற்றும் அலுவலகங்கள், தமிழகம், ஆந்திராவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் உள்ளன.வரி ஏய்ப்புகல்கி பகவானை தரிசனம் செய்ய, 5,000 ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கட்டணத்திற்கு, உரிய வருமான வரி செலுத்தவில்லை என, கல்கி ஆசிரமத்தின் மீது, வரி ஏய்ப்பு புகார் எழுந்தது.

அதையடுத்து, தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள, கல்கி ஆசிரமம் மற்றும் பகவானின் மகன், என்.கே.வி.கிருஷ்ணாவுக்கு தொடர்புடைய, 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரி துறையினர், நேற்று அதிகாலை முதல், சோதனையில் ஈடுபட்டனர்.சென்னையில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம், நேமம் கிராமத்தில் உள்ள ஆசிரமம் உட்பட, பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில், 40 குழுக்களாக, 250க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.


ஆவணங்கள்இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஆந்திராவில், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில், 40 குழுக்கள் சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு புகாரில், இந்த சோதனை நடந்தது. சோதனையின்போது, கணக்கில் காட்டப்படாத, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Santhan Raj - singapore,சிங்கப்பூர்
19-அக்-201914:02:06 IST Report Abuse
Santhan Raj இளைய தலைமுறையினர் பாதிக்கப்படுகின்றனர். தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும் என்று வள்ளுவன் வகுத்த பாதையைச் சீர் தூக்கிப் பார்கக்கும் திறனற்ற மரமண்டைகளாகிவிட்டோமே என்று எண்ணும்போது மனது வெட்கப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
19-அக்-201906:05:18 IST Report Abuse
kalyanasundaram ஹொவ் அபௌட் ரஞ்சிதானந்த.
Rate this:
Share this comment
Cancel
RAJA - chennai,இந்தியா
18-அக்-201913:32:30 IST Report Abuse
RAJA நம்பிக்கை மட்டுமே கடவுள், ராமர் இருந்த காலத்தில் அவரை கடவுளாக ஏற்கவில்லை, கிருஷ்ணர் காலத்தில் ஏற்கவில்லை , இருக்குமபோது யாரும் நம்பமாட்டார்கள் அவர்களுக்குப்பிறகு தேடுவார்கள் . அம்மா பகவான் இந்தியா மட்டும்மல்ல உலகம் முழுவதும் பகதர்கள் இருக்கிறார்கள் . யாரையும் வற்புறுத்தி அழைப்பதில்லை நம்பிக்கை உள்ளவர்கள் வழிபடுகிறார்கள் நன்மை அடைகிறார்கள். இங்கு சிலபேர் தெரியாமல் ஏதேதோ எழுதுகிறாரகள் உண்மை தெரியாமல் எழுதகூடாது . பகவானுக்கு இப்போது மட்டுமல்ல 1997 முதல் சிலபேரால் பிரச்சனை அதை பகவான் சரிபடுத்துவார் .
Rate this:
Share this comment
Santhan Raj - singapore,சிங்கப்பூர்
19-அக்-201913:58:35 IST Report Abuse
Santhan Rajஇளைய தலைமுறையினர் பாதிக்கப்படுகின்றனர். தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும் என்று வள்ளுவன் வகுத்த பாதையைச் சீர் தூக்கிப் பார்கக்கும் திறனற்ற மரமண்டைகளாகிவிட்டோமே என்று எண்ணும்போது மனது வெட்கப்படுகிறது....
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-அக்-201911:05:50 IST Report Abuse
Malick Rajasanthan.Raj. சிங்கப்பூர் .. சரியாக சொல்கிறார். இல்லை நாங்கள் அப்படியே இருப்போம் சிந்திக்கவே மாட்டோம் என்று RAJ.சென்னை கூறுகிறார். எது சரி என்று அனைவருக்கும் தெரியும் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X