ஹிந்து மாநாடு சீர்குலைப்பு; அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
VHP America,VHPA,ஹிந்து மாநாடு,சீர்குலைப்பு,அமெரிக்கா,வழக்கு

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிகாகோ நகரில், கடந்த ஆண்டு நடைபெற்ற, இரண்டாவது சர்வதேச ஹிந்து மாநாட்டை சீர்குலைக்க முயன்ற, ஐந்து பேர் மீது, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், அமெரிக்க நீதிமன்றத்தில், வழக்கு தொடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில், சர்வதேச ஹிந்து மாநாடு, இரண்டாவது ஆண்டாக கடந்த ஆண்டு நடைபெற்றது.இதில், 2,500 பேர் பங்கேற்றனர். மாநாடு நடந்து கொண்டு இருந்தபோது, அத்துமீறி உள்ளே நுழைந்த சிலர், இந்தியாவில் சிறுபான்மையினர் மிக மோசமாக நடத்தப்படுவதாக கூச்சலிட்டனர். இது, மாநாட்டின் அமைதியை சீர்குலைத்தது.


latest tamil newsஇது தொடர்பாக, வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அமெரிக்க கிளை சார்பில், இலினாய்ஸ் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க பத்தரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
17-அக்-201920:31:39 IST Report Abuse
Rajagopal வெளி நாடுகளில் குடியேறிய இந்தியர்களால் தான் இன்று இந்தியாவுக்கு சர்வதேச அளவில் ஆதரவு கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தியர்களை அவர்கள் மதிக்கத் தொடங்கியதே நம் மக்களின் கடின உழைப்பினால்தான். தவிர, பலர் அரசியல் கலந்த இட ஒதுக்கீட்டினால் முன்னேற இயலாமல், வெளி நாடுகளுக்கு குடி பெயர்ந்து, கடினமாக உழைத்து, வாழ்க்கையில் முன்னேறியவர்கள். இந்தியாவில் இந்து மதத்தை கம்யூனிஸ்டுகளும், கிறித்துவத் திருச்சபைகளும், இஸ்லாமிய இயக்கங்களும், திராவிட இயக்கங்களும், இடது சாரியினரும் சிதைத்து அழிப்பதைத் தடுக்க வேண்டுமானால், சர்வ தேச அளவில் இந்து இயக்கம் வளர்ந்து பலமாக வேண்டும். அதுதான் இத்தனை வருடங்களில் நடந்திருக்கிறது. மேலை நாடுகளில் இந்தியர்கள் வலுப் பெற்றதால்தான் இன்று இந்தியாவால் சர்வதேச அளவில் தனக்கு சாதகமாக எல்லாம் அமைத்துக் கொள்ள முடிகிறது. நமக்கு ஆதரவும் முன்னை விட நிறையக் கிடைக்கிறது. நம் மீதும், நம் திறமையின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. நமது நாடு பயங்கரவாதத்தால் படும் அவதியை அவர்களால் உணர முடிகிறது. திரை கடல் ஓடி திரவியம் தேடியதால் இன்று சர்வதேச அளவில் இந்தியா மதிக்கப் படுகிறது. எல்லோரும் நாட்டுக்குள்ளே அடங்கி இருந்தால் தேக்கம் ஏற்படும். நமது மக்கள் இன்னும் பல நாடுகளில் குடி பெயர வேண்டும். நம்மைப் பற்றி ரொம்பவும் தெரியாது. நமது பாரம்பரியத்தையும், நமது நீண்ட வரலாற்றையும் அவர்களுக்குத் தெரியவில்லை. இப்போதுதான் அது அவர்களுக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. இது வெளி நாட்டில் வாழும் இந்தியர்களால் உண்டாகி இருக்கிறது. இதை யாரும் மறந்து விடக்கூடாது. பாகிஸ்தான், காலிஸ்தான், காஷ்மீர், ஈழம் போன்ற நாட்டு இயக்கங்கள் பெரிய அளவில் இங்கே இயங்குகின்றன. இந்த நாட்டு அரசியல்வாதிகளைக் கையில் போட்டுக் கொண்டு, நம் நாட்டைப் பற்றி இழிவான செய்திகளை பரப்புகின்றன. இந்த அரசியல்வாதிகளும் அவர்கள் சொல்வதை நம்பிக்கொண்டு நம் நாட்டை அவதூற்றுக்கு ஆளாக்குகிறார்கள். இதை முறியடிக்க வெளி நாட்டு இந்தியர்களின் உழைப்பு மிகவும் அவசியம். இந்துக்களைக் கேவலமாக நினைத்து வளர்த்திருக்கிறார்கள். இதை மாற்றத்தால் நாங்கள் அனைவரும் ஒன்று கூடி உழைக்கிறோம்.
Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
19-அக்-201917:58:48 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன்அவரவர் தேவைக்கு வெளிநாடு செல்கின்றனர். அப்படி வெளிநாட்டுக்கு சென்றவர்களால் தான் இந்தியாவுக்கு சர்வதேச ஆதரவு கிடைக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியர்கள், ஆங்கில - பிரெஞ்சு - போர்ச்சுகீஸ் ஆட்சிக்காலம் முதலே வெளிநாட்டில் குடியேறி வேலைபார்க்க ஆரம்பித்துவிட்டனர்...
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
17-அக்-201916:03:03 IST Report Abuse
Sampath Kumar நான் காசு வாங்கியதை நீ பார்த்த ?/ ? அப்ப சரி ??
Rate this:
Cancel
17-அக்-201914:57:21 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இப்படி கூவி கூவி , இந்துக்களை ஒழிக்க நினைக்கிறார்கள் , இப்போதே வீட்டின் படியேறி வந்து நீ கும்பிடும் கடவுள் சாத்தான் என்றும் மதம் மாறிவிடுங்கள் என்று சொல்கிறார்கள் , மறுத்து பேசியவர்களை வெட்டிக்கொல்கிறார்கள். பேருந்து நிலையம் , ரயில் நிலையம் , பள்ளி , கல்லூரிகள் , அரசு மருத்துவமனைகள் என்று எல்லா இடத்திலும் மதமாற்ற முயற்சிகள் நம்மேல் , நம்பிள்ளைகள் மேல் கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஏழைகள் மேல் பணம் //வேலை /பொருள் கொடுத்து திணிக்கப்படுகிறது. இனியும் நாம் பொறுத்துக்கொண்டிராமல் இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும். காரணம் இவர்கள் திருடன் ஒருவன் ஓடும்போது திருடன் திருடன் என்று கத்திகொண்டே ஓடுவது போல , இவர்களே அராஜகங்களை நிறைவேற்றிக்கொண்டு பழியை இந்துக்கள் மேல் போடுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X