பொது செய்தி

இந்தியா

வைரங்கள் பதிக்கப்பட்ட ரூ.5 கோடி கார் பரிசு

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (8)
Advertisement
diamond,car,வைரம்,ரூ.5 கோடி,கார்,பரிசு

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், 50 கோடி ரூபாய்க்கு வைரங்கள் வாங்கும் வாடிக்கையாளருக்கு, வைரக் கற்கள் பதிக்கப்பட்ட, 5 கோடி ரூபாய் மதிப்பிலான, மெர்சிடிஸ் பென்ஸ் கார், பரிசாக காத்திருக்கிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், இரு தினங்களாக, 'பாரத் வைர வாரம்' என்ற கண்காட்சி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வைரக் கற்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டன. விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில், இந்த கண்காட்சியில், 50 கோடி ரூபாய்க்கு வைரங்கள் வாங்கும் வாடிக்கையாளருக்கு, 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரங்கள் பதிக்கப்பட்ட, 'மெர்சிடிஸ் - எஸ் கிளாஸ்' கார், பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காரின் மொத்த மதிப்பு, 5 கோடி ரூபாய்.





'ஒருவேளை, 50 கோடி ரூபாய்க்கு, யாரும் வைரங்கள் வாங்கவிட்டால், இந்த கார் ஏலத்தில் விடப்படும். இதில் கிடைக்கும் தொகை, மஹாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
18-அக்-201910:50:38 IST Report Abuse
Sampath Kumar யாரு அது இந்தியா பிச்சைக்கார நாடு என்று ?? வைரம்டா, காருட, ஒளிரும் இந்தியாட
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
17-அக்-201917:28:21 IST Report Abuse
natarajan s இந்திய பொருளாதாரம் சீரழிந்து விட்டது ஆனால் 50 கோடிக்கு வைர வியாபாரம் நடக்கும் என்ன ஒரு OXIMORON
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-அக்-201916:38:41 IST Report Abuse
Lion Drsekar நாம ஊர்ல நிறுத்தி வைச்ச கார்லே இருக்கிற சக்கரங்களை தூக்கிக்கொண்டு போகிறாராம்,இப்படி ஒரு கார் ரோட்டில் வந்தால் இடிக்காதவனும் இடித்துவிட்டு வைரத்தை திருடுவான். பொம்மைக்காராக இருந்தால் பரவாயில்லை, ஓடும் காராக இருந்தால் ஆபத்து, இதற்க்கு பெயர்தான் சொந்த காசில் சூனியம் என்பார்கள், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X