பிப்., வரை, 'கிரே' பட்டியலில் பாக்.,

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (5)
Advertisement
Pakistan,பாகிஸ்தான்,grey list

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை, அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை, 'கிரே' பட்டியலில் வைத்திருக்க, எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு முடிவு செய்துள்ளது.

பணமோசடி, பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பது மற்றும் சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை எதிர்த்து, 1989ம் ஆண்டில் நிறுவப்பட்டது, எப்,.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு. ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமை இடமாக வைத்து செயல்பட்டு வருகிறது.

பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த விவகாரத்தில், கடந்த ஆண்டில், பாகிஸ்தானை, 'கிரே' பட்டியலில், எப்.ஏ.டி.எப்., சேர்த்தது. 'பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவது மற்றும் பணமோசடிகளை முற்றிலுமாக நிறுத்தும் நடவடிக்கைகளை, 2019 அக்டோபருக்குள் நிறுத்த வேண்டும்; இல்லாவிடில், ஈரான் மற்றும் வட கொரியாவுடன் கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெறும்' என, எப்.ஏ.டி.எப்., எச்சரித்திருந்தது.





இந்நிலையில், பாரீசில், எப்.ஏ.டி.எப்., அமைப்பின், மூன்று நாள் கூட்டம், கடந்த, 15ல் துவங்கியது. பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிகளைக் கட்டுப்படுத்த, பாகிஸ்தான் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி, இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. பாகிஸ்தானின், பொருளாதார விவகாரத்துறை அமைச்சர், ஹம்மத் அசார், பயங்கரவாதத்திற்கு எதிராக தங்கள் நாடு எடுத்துவரும் நடவடிக்கைகளை தெரிவித்தார். சீனா, துருக்கி ஆகிய நாடுகள், பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைகளை பாராட்டின.

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள, ஹபீஸ் சயீத், தன் கணக்குகளில் இருந்து நிதியை எடுக்க, பாகிஸ்தான் அனுமதித்ததை மேற்கோள்காட்டி, பாகிஸ்தானை, கறுப்புபட்டியலில் சேர்க்க, இந்தியா வலியுறுத்தியது. பயங்கரவாதிகளுக்கு நிதிவழங்குவது மற்றும் பணமோசடிகளை முற்றிலுமாக தடுக்க, கூடுதல் நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாகிஸ்தானை கேட்டுக் கொண்ட எப்.ஏ.டி.எப்., அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை, 'கிரே' பட்டியலில் பாகிஸ்தானை வைத்திருக்க முடிவு செய்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இது பற்றிய உறுதியான முடிவு, இன்று வெளியாகும் என, தெரிகிறது.

எப்.ஏ.டி.எப்., அமைப்பு, கருப்பு பட்டியல் மற்றும் கிரே பட்டியல் என, இருவகைகளாக பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை பிரிக்கிறது. கருப்பு பட்டியலில் உள்ள நாடுகள், ஒத்துழைக்காதவை என வகைப்படுத்தப்பட்டு, அதனுடன், நிதி தொடர்பான எந்த பரிமாற்றத்தையும் உலகநாடுகள் வைத்துக்கொள்ளாது. கிரே பட்டியலில் உள்ள நாடுகள், எந்த நேரத்திலும், கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படலாம் என்ற எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கு, உலக நாடுகளிடம் இருந்து கடன் பெறுவதில் சிக்கல், பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம், பிற நாடுகளுடன் வர்த்தக தொடர்பும் நிறுத்தப்படும் நிலை ஏற்படும். கிரே பட்டியலில், பாகிஸ்தான் நீடிக்க, எப்.எ.டி.எப்., முடிவு செய்துள்ளதாக வந்துள்ள தகவல்களை, பாகிஸ்தானின் நிதி அமைச்சக செய்தித் தொடர்பாளர், ஒமர் ஹமீத் கான் மறுத்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-அக்-201916:32:22 IST Report Abuse
Endrum Indian ஏன் பிப்ரவரி வரை அதற்குப்பிறகு அமெரிக்க ஆட்சி மாற்றம் என்று நம்பலாமா??
Rate this:
Share this comment
Cancel
17-அக்-201912:16:16 IST Report Abuse
நக்கல் இதை பற்றிய அறிக்கை 18ம் தேதிதான் வெளியிடப்படும்... க்ரேயில் இருந்து கருப்பு பட்டியலுக்கு மாற்றாமல் இருக்க 3 நாடுகள் ஆதரவு தேவை... சீனா, துருக்கி, மலேசியா ஆகிய மூன்று நாடுகள் வழக்கம் போல பக்கிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன... இவர்கள்தான் காஷ்மீர் விஷயத்திலும் பக்கிகளுக்கு ஆதரவு... இந்த நால்வரும்தான் நமது முக்கிய எதிரிகள்.. முக்கியமாக சீனா.. தனது நாட்டில் இஸ்லாமியர்களை தூக்கிப்போட்டு மெதிக்கிறார்கள், ஆனால் பாகிஸ்தானில் தீவிரவாதிகளை ஆதரிக்கிறார்கள்... இந்த போக்கு சீனாவை நிச்சயமாக பாதிக்கும்... அமெரிக்கா பின்லேடனை வளர்ந்துவிட்டது எப்படி அவர்களையே பாதித்ததோ அதே போல... இஸ்லாமியர்களுக்கு மதம்தான் முக்கியம், நாடு அல்ல... பக்கிகள் க்ரே லிஸ்ட்ல தாங்கள் இன்னும் மூன்று மாதம் இருக்கப்போவது தங்களுக்கு கிடைத்த வெற்றியாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்... போன வாட்டியும் 100க்கு 10 மதிப்பெண், இந்த வாட்டியும் 10.... இதில் என்ன பெருமை... திராவிட கட்சிகளையே வென்றுவிடுவார்கள் அறிவீனத்தில்...
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
17-அக்-201909:08:13 IST Report Abuse
mindum vasantham pakistan than thai நாடான இந்தியாவிடம் நட்புணர்வு பாராட்ட வேண்டும் இல்லை என்றால் அமெரிக்கா , சீனா போன்ற அந்நிய நாட்டிடம் அடிமைப்பட்டு தான் வாழும் நிலை வரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X