கார்த்தியும் விரைவில் கைது?'

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (66)
Advertisement

புதுடில்லி: ஏர்செல் - மேக்ஸிஸ்' வழக்கில், சிதம்பரம் மகன் கார்த்தி விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.






சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக, 2006ல் பதவி வகித்த போது, ஏர்செல் - மேக்ஸிஸ் நிறுவனங்களின் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மேக்ஸிஸ் நிறுவனத்தின் முதலீடுக்கு, எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்தது. இது போன்ற அனுமதியை, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி அளிக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறையை மீறி, நிதியமைச்சர் என்ற முறையில், சிதம்பரம் அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு உள்ளது.





இந்த வழக்கில், பண மோசடி குறித்து, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில், சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியின் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், சிதம்பரம் மற்றும் கார்த்திக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமினை ரத்து செய்யக் கோரி, கடந்த, 10ம் தேதி, டில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இதன் மீதான உத்தரவு, நவ., 29ல் விசாரணைக்கு வருகிறது. முன்ஜாமின் ரத்து செய்யப்பட்டால், கார்த்தி உடனடியாக கைது செய்யப்படுவார் என தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
17-அக்-201920:40:06 IST Report Abuse
Sampath Kumar பதில் சொல்ல திராணி இருந்தால் சொல்
Rate this:
Share this comment
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
17-அக்-201920:03:28 IST Report Abuse
Chowkidar NandaIndia "சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா" என்கிற முருகனின் பாடலை இங்கு பாடுவோம் ஆனந்தமாக.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-அக்-201919:04:17 IST Report Abuse
J.V. Iyer இந்த நல்ல செய்திக்கு இவ்வளவு நாள் காக்க வைத்துவிட்டீர்கள்?? நியாயமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X