பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் ஒளிருமா கலை சிற்பங்கள்?

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (10)
Advertisement
மாமல்லபுரம், கலை சிற்பங்கள், தொல்லியல் துறை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பல்லவ சிற்பங்கள், தொல்லியல் துறை தலைமையக உத்தரவிற்கு பிறகே, மின்னொளியில் ஒளிரும் என, அத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால, கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடைவரை சிற்பங்களை, பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், 11ம் தேதி சந்தித்தனர்.


தலைவர்கள் சந்திப்பு


இவர்களை கவர, சிற்பங்களை பராமரிக்கும் மத்திய தொல்லியல் துறை, சிற்ப பகுதிகளில், வண்ண விளக்குகளை அமைத்தது. விளக்கின் வெளிச்சத்தில், சிற்பங்கள் ஒளிர்வதை பார்த்து, இரு நாட்டு தலைவர்கள் மிகவும் ரசித்தனர்.பல ஆண்டுகளுக்கு முன், சிற்ப பகுதிகளில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது; நாளடைவில் கைவிடப்பட்டது.இரு நாட்டு தலைவர்கள் வருகைக்கு பின், சிற்பங்கள் ஒளிர்வது தொடரும் என, சுற்றுலா பயணியர் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால், பிரதமர் - சீன அதிபர் சென்றதும், சிற்ப பகுதிகளில் இருந்த, 1,000க்கும் மேற்பட்ட விளக்குகள் அகற்றப்பட்டன. இது குறித்து, தொல்லியல் துறையினர் கூறியதாவது:பிரதமர் - சீன அதிபர், வருகைக்காக, சிற்ப பகுதிகளில், விளக்குகள் அமைத்து, இரவிலும் ஒளிர வைத்தோம். இரவில், தொடர்ந்து ஒளிர வைக்க, நாங்கள் தயாராகவே உள்ளோம்.






அனுமதி நீட்டிப்பு?


காலை, 6:00 - மாலை, 6:00 மணி வரையே, பயணியரை அனுமதிக்க, உத்தரவு உள்ளது.இரவு, 10:00 மணி வரை, விளக்குகள் ஒளிர வைத்து, பயணியர் அனுமதி நேரத்தை நீட்டிக்க, டில்லியில் உள்ள துறை தலைமையகம் உத்தரவிட வேண்டும்.நுழைவுக் கட்டண மைய ஊழியர்கள், பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டதும், இரவில் பயணியரை அனுமதிக்க, துறை தலைமையகம் உத்தரவிடும்; அதற்காக எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
17-அக்-201916:11:58 IST Report Abuse
K.Sugavanam ஒரு நாள் நடப்புக்காக போட்டாங்க..அதை வருடம் பூரா பண்ணினால் ASI போண்டி ஆகிவிடுமே..
Rate this:
Share this comment
Cancel
Palani Rajan - Hyderabad,இந்தியா
17-அக்-201915:26:09 IST Report Abuse
Palani Rajan 6 - 6 ஒகே ... நைட் நம்ம ஆளுங்களை விட்ட சேட்டை பண்ண ஆரம்பிச்சிருவாங்க
Rate this:
Share this comment
Cancel
17-அக்-201914:44:23 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மாலை ஆறு மணிவரை என்பது மிகவும் குறைவான நேரம் , இரவு ஒன்பது மணிவரை நீட்டித்து , இரவு விளக்கில் சிற்பங்களை காண அனுமதிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X