அரசியல் செய்தி

தமிழ்நாடு

அவங்க ஆயிரமா... இந்தா புடி ரெண்டாயிரம்; பண மழையில் நனையும் விக்கிரவாண்டி

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (72)
Advertisement
பண மழை, விக்கிரவாண்டி, அதிமுக, அ.தி.மு.க., தி.மு.க., திமுக, ஆயிரம், ரெண்டாயிரம், vikkiravandi, admk, a.d.m.k., D.m.k., dmk

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டு, பணம் பட்டுவாடா செய்து முடித்து விட்டதால், வாக்காளர்கள் ஏக சந்தோஷத்தில் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல், வரும், 21ம் தேதி நடக்க உள்ளது. தங்கள் வசம் உள்ள தொகுதியை தக்க வைக்க, தி.மு.க.,வும்; தொகுதியைக் கைப்பற்ற, அ.தி.மு.க.,வும் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர்.சட்டத் துறை அமைச்சர் சண்முகம் ஏற்பாட்டில், நகரம், கிராமம் கிராமமாக, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, பணம் பட்டுவாடா செய்வதற்கு திட்டம் போட்டனர். இதேபோன்று, தி.மு.க.,வினரும், முன்னாள் அமைச்சர் பொன்முடி ஏற்பாட்டின் படி, எந்தெந்த வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கலாம் என, பட்டியல் தயாரித்தனர்.இதன் தொடர்ச்சியாக, இரண்டு நாட்களுக்கு முன், விக்கிரவாண்டி தொகுதி முழுவதும், தி.மு.க., நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு, 1,000 ரூபாயை கச்சிதமாக பட்டுவாடா செய்து முடித்துள்ளனர்.
இதேபோல், அ.தி.மு.க.,வினர், நேற்று அதிகாலை, 3:00 மணியில் இருந்து, வாக்காளர்களின் கதவை தட்டி, 2,000 ரூபாயை பட்டுவாடா செய்துள்ளனர். மேலும், ஆளுங்கட்சி சார்பில், வாக்காளர்களுக்கு புடவை, வேட்டியும் கொடுத்து அசத்தி வருகின்றனர். இரு கட்சியினரும், 80 சதவீத வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்துவிட்டனர். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி இன்றி, கன கச்சிதமாக பணம் பட்டுவாடா செய்து முடித்து விட்டனர். இரு கட்சிகளும், ஒருவருக்கு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்ளவில்லை.அதே நேரம், ஆளுங்கட்சி, தங்களை விட ஒரு மடங்கு அதிகமாக கொடுத்துள்ளதால், தி.மு.க.,வினர் மத்தியில் பயம் தொற்றிக் கொண்டுள்ளது. இதை சரிசெய்யும் வகையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில், வாக்காளர்களுக்கு கூடுதலாக, 1,000 ரூபாயை கொடுத்தால், உடனே ஆளுங்கட்சியும் கூடுதலாக, 1,000 ரூபாய் தர தயாராகி வருகிறது.

தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பறக்கும் படையினர், நமக்கேன் வம்பு என ஒதுங்கிக் கொண்டனர். தீபாவளி நேரத்தில், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டி பணம் தருவதால் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள் பலர், அடகு வைத்திருந்த நகைகளை மீட்டு வருகின்றனர்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
17-அக்-201920:18:13 IST Report Abuse
M.COM.N.K.K. காசேதான் கடவுளப்பா இது அந்த கடவுளுக்கும் தெரியுமப்பா இது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரிந்ததுதானப்பா.காசேதான் கடவுளப்பா
Rate this:
Share this comment
Cancel
Baskar - Chennai,இந்தியா
17-அக்-201919:51:32 IST Report Abuse
Baskar ஆஹா . மக்கள் அரசர்கள் ஆனால் , என்ன செய்வார்களோ, அதை அரசியல் வாதிக்கு கற்று கொடுக்கின்றனர் .
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
17-அக்-201919:49:42 IST Report Abuse
Matt P பொம்முடி சம்முகம் ...ஒருத்தன் அமைச்சனா இருந்தவன் ,இன்னொருத்தன் அமைச்சரா இருப்பவன் ...பத்திரிக்கையில் தெளிவா எழுதப்பட்டிருக்கிறது ...எப்படி எப்படி தவறுகள் செய்கிறார்கள் என்று ...தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது... ஒழுங்காக பணியை செய்யாத அதிகாரிகள் தான் முதலில் கைது செய்யப்பட்ட வேண்டியவர்கள் .பத்திரிகைகள் உண்மையை கண்டறியமுடியுமென்றால் ,அதிகாரிகளால் ஏன் முடியாது? ..இப்படி பணம் கொடுத்து வெற்றி பெற நினைக்கிறார்களே ...வெற்றி பெற்றவுடன் கோடியா கோடியா சம்பாதிக்க முடியுமென்றா? ...அந்த முடியையும் முகத்தையும் முடிஞ்சா புடிச்சு ஜனநாயகம் வாழ முயற்சியுங்கப்பா. ...இவனுக இருக்கும் வரைக்கும் நேர்மையை எல்லாம் கொண்டுவர முடியாது ...கமலஹாசா ......குடும்ப மானம் என்று ஓன்று எவனுக்கும் இருப்பதாக தெரியவில்லை ...அரசியலில்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X