சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மனிதன் வேறு கிரகத்திற்குப் போகக் கூடாதா?

Added : அக் 17, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 மனிதன் வேறு கிரகத்திற்குப் போகக் கூடாதா?

சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகங்களுக்கு மனிதர்கள் குடிபெயரும் யோசனை, 'பைத்தியகாரத்தனமானது' இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? அண்மையில் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற சுவிட்சர்லாந்தின் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் மேயர்.

சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகங்களை அடையாளம் காண்பதற்கான விண்வெளியியல் உத்திகளை வகுத்துத் தந்ததற்காகத்தான் இவருக்கும், இவரது சகாவான டிடியர் குவெலோசுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஜெனீவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்த மைக்கேல், அவரது மாணவர் குவெலோசுடன் இணைந்து சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகங்களை கண்டறிய, சில எளிய கருவிகளையும், அறிவியல் முறைமைகளையும் உருவாக்கினர்.

அதைப் பயன்படுத்தி, 1995 அக்டோபரில் ஒரு புதிய கிரகத்தை கண்டறிந்தனர். அன்றிலிருந்து இன்று வரை, 4,000 புதிய வெளி கிரகங்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. இந்த நிலையில், “பூமியின் இயல்பை ஒத்திருக்குகும் ஒரு கிரகத்திற்கு மனிதர்கள் பயணித்து சென்றடையவே பல ஆண்டுகள் ஆகும். எனவே, அந்த யோசனை நடைமுறைக்கு ஒத்து வராது,” என மைக்கேல் கூறியுள்ளார்.

“பூமி இன்றைக்கும் அழகானதாகவே இருக்கிறது. இன்னும் பல கோடி மனிதர்களை வாழவைக்கும் திறன் பூமிக்கு உள்ளது. இந்த பூமியை பராமரித்து, இதிலேயே நம் தலைமுறைகள் வாழ்வது தான் நல்லது,” என்று அழுத்தமாக மைக்கேல் கூறியிருப்பது, விண்வெளி ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
26-அக்-201918:40:45 IST Report Abuse
Somiah M இயற்கை இயற்கையாகவே இருக்கட்டும் .அதை மாற்றி அமைக்க முயற்சிப்பது வீண் வேலை மாத்த்ரம் மட்டுமல்ல வெற்றி அடைய முடியாததும் ஆகும் .இயற்கை தன்னை சமநிலை படுத்திக்க கொள்ளும் .
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
20-அக்-201920:48:05 IST Report Abuse
oce மழை தரும் குறிப்பிட்ட பருவ காலங்களில் அவைகளின் மேற் பரப்பில் பாயும் கடுமையான சூரிய உஷ்ணத்தை தாங்கிய படி மேகங்கள் தம் அடிப்பக்கம் கருத்து கனக்கின்றன. அவை எப்படி குளிர்கின்றன. எப்படி நீர்த் திவலைகள் தோன்றி. பூமியின் மீது மழைத் துளிகளாக விழுக்கின்றன. எவராவது பதில் சொல்ல முடியுமா. மனித இனம் வேற்று கிரகத்திற்கு போகாமல் இந்த பூமியிலேயே வாழ கடல் ஆக்ரமிப்பை வெற்றி கொள்ளுவதற்காக இக்கட்டுரை செய்திக்கு மூலத்தை கண்டு பிடிக்க வேண்டிய கருத்து.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
20-அக்-201913:55:33 IST Report Abuse
oce பூமியை யார் பராமரிப்பது. பூமியை தாக்க துடித்துக்கொண்டிருக்கும் கடல் மட்டம் மேலும் உயராமல் கட்டுப்படுத்துவதற்கு போர்க் கால முயற்சி எடுக்கவேண்டும். அதற்கு உலகளவில் எந்த இயற்பியல் வல்லுநரும் பொறுப்பேற்க வில்லை. பருவ காலங்களில் மேகங்களை உருவாக்கும் வானத்தின் ஈரப்பதத்தை கட்டுப்படுத்தி தேவையான அளவுக்கு நினைத்த போது மழை பெய்ய வைக்கலாம். கடல்களில் பனி மலைகள் சேராவண்ணம் தடுக்கலாம். பூமி சுற்றி வரும் சூரிய சுற்று வட்டப்பாதையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை (அதாவது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாத வடகிழக்கு பருவ காலம் தோன்றும் 240 முதல் 300 டிகிரி வரையுள்ள பகுதி) கண்காணிக்க வேண்டும். அந்த இடத்தில் நிலவும் வானின் நீர் திண்மையை பரிசோதிக்க வேண்டும். தென் மேற்கு பருவ மழையை மட்டும் அனுமதிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X