சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவர்: அமித்ஷா

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (43)
Advertisement

குருகிராம்: இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024ம் ஆண்டிற்குள் வெளியேற்றப்படுவார்கள் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.





அரியானா மாநிலத்தில் அக்., 21ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குருகிராமில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் , உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.




அப்போது அமித்ஷா பேசியதாவது: என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியலை, ராகுல் ஏன் எதிர்க்கிறார். இந்தியாவில் குடியேறியவர்களை வெளியேற்ற கூடாது, வெளியேற்றினால் அவர்கள் எங்கு வாழ்வார்கள் என ராகுல் மற்றும் முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் கவலைப்படுகிறார்கள். சட்டவிரோதமாக குடியேறுபவர்களை நினைத்து இவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும். 2024ம் ஆண்டிற்குள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.




1990 முதல் காங்., ஆட்சியில் இருந்தபோது மட்டும், 40 ஆயிரம் மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். ஆனாலும், அவர்கள் 370வது பிரிவை நீக்கவில்லை. ஆனால் பாஜ., அரசு நீக்கியதற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவளித்தாலும் காங்., எதிர்த்தது. மன்மோகன் சிங், 10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்தும், பாக்., பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காங்., கட்சியினர் 370வது பிரிவு நீக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
17-அக்-201921:18:48 IST Report Abuse
rmr நைஜீரியர்கள் பலர் இங்கு உள்ளனர் அதையும் கொஞ்சும் கவனிக்கணும்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-அக்-201919:43:09 IST Report Abuse
Nallavan Nallavan மணிமேகலையும் அதுல அடக்கமா ??
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-அக்-201916:29:59 IST Report Abuse
Endrum Indian அது மட்டும் நடந்தால் நம் இந்திய நாட்டின் ஜனத்தொகை பச்சையாக ஒரு 23 கோடி குறையுமா????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X