மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில், கைதான மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், உதித்சூர்யாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்குவதாவும், வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளதால் அதில் முக்கிய தொடர்புடைய வெங்கடேசனுக்கு ஜாமின் தர மறுப்பதாகவும் உத்தரவிட்டார். மேலும், உதித்சூர்யா, மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பாக தினமும் காலை 10.30க்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையும் விதித்தார்.