பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019
Advertisement

சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தில் நேற்று (அக்., 16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.




கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எட்டயபுரம்-14செ.மீ., கன்னியாகுமரி மற்றும் கொடைக்கானலில் தலா 13செ.மீ., கடலாடி-12செ.மீ., மழை பதிவாகியுள்ளது. குமரி கடல் பகுதியில் மீனவர்களுக்கு நேற்று கொடுக்கப்பட்ட எச்சரிக்கை விலக்கி கொள்ளப்படுகிறது. மேலும், மாலத்தீவு, லட்சத்தீவு, கேரள கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு புவியரசன் கூறினார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்தது.




சென்னை: கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, பம்மல், ஆவடி, அம்பத்தூர், பாடி, அயனாவரம், எழும்பூர், முகப்பேர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டியது.

வேலூர்: அரக்கோணம், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

திருப்பூர்: அவிநாசி, ஆட்டையம்பாளையம், சேயூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

திருவண்ணாமலை: வந்தவாசி, செம்பூர், தென்னாங்கூர், பாதூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

தூரத்துக்குடி: கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

விழுப்புரம்: விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், சித்தணி, அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

கன்னியாகுமரி: கடலோர பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.

மதுரை: காளவாசல், அரசரடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் காலையும் இரவிலும் மழை பெய்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X