மக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (65)
Advertisement
PM Modi, Modi,  BJP, kashmir, article 370, congress, cong, Maharastra, காங்கிரஸ், காங்., பா.ஜ., பாஜ, பிரதமர் மோடி, மோடி, மஹாராஷ்டிரா,

பார்லி: மக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி துவங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் பார்லி என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: காஷ்மீருக்கு சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து வரலாற்றில் விவாதிக்கப்படும் போது, நாட்டு நலனுக்காகஎடுக்கப்பட்ட அந்த முடிவு குறித்தும், அப்போது, அதனை எதிர்த்தவர்கள், விமர்சித்தவர்கள், அவர்களின் கருத்துகள் குறித்தும் நினைவில் கொள்ளப்படும்.
காங்கிரஸ் தலைவர் ஒருவர், காஷ்மீரில் ஹிந்துக்கள் அதிகம் இருந்தால், சிறப்பு சட்டம் நீக்கம் என்ற முடிவை பா.ஜ., எடுத்திருக்காது என கூறினார். நீங்கள், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டில் ஹிந்து முஸ்லிம் என பார்க்கிறீர்களா? காஷ்மீர் குறித்த மத்திய அரசின் முடிவால், நாடு அழிந்துவிடும் என காங்., தலைவர் ஒருவர் கூறினார். முடிவு எடுத்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. நாடு அழிந்துவிட்டதா?




மற்றொரு தலைவர், சிறப்பு சட்டம் நீக்கத்தால், காஷ்மீர் நம்மை விட்டு சென்றுவிடும் என தெரிவித்தார்? காஷ்மீர் நம்மை விட்டு சென்றுவிட்டதா? யாராவது காஷ்மீர் செல்ல வேண்டும் என விரும்பினால் என்னிடம் தெரிவியுங்கள். நான் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன். மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைக்கப்படும் பணிகள் துவங்கிவிட்டது. மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பாஜ., அனைத்து வெற்றி சாதனைகளையும் முறியடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.




Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
19-அக்-201919:56:15 IST Report Abuse
mohan என்னங்க...பல வட நாட்டவர், வங்கியில் போட்ட பணத்தை காணம்னு அழுகுறாங்க... அது உண்மையா....
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
18-அக்-201901:00:49 IST Report Abuse
ashak மேடையில் பேசும் போது சிறை என்பார், ஆனா தள்ளுபடி செய்வார், பொய்யை மட்டுமே மூலதனமாக கொண்டவர்
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
19-அக்-201901:39:48 IST Report Abuse
ashakகார்ப்பரேட்டுக்கு தள்ளுபடி செய்வார்...
Rate this:
Share this comment
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
17-அக்-201921:54:28 IST Report Abuse
Anantharaman Srinivasan மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைக்கப்படும் பணிகள் துவங்கிவிட்டது. மாநிலத்துக்கு ஒரு காங்கிரஸ் தலைவர் சிறையில் அடைக்கப்படுவார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X