பொருளாதார நிலைமை: மன்மோகன் புகார்

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (89)
Advertisement
manmohan singh, manmohan,  congress, Former PM, Pm, Prime minister, மன்மோகன் சிங், மன்மோகன், காங்கிரஸ், காங்., பொருளாதாரம்,

மும்பை: எதிர்க்கட்சிகள் மீது குறை சொல்வதை மத்திய அரசு நிறுத்திவிட்டு, பொருளாதார நிலைமை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
மும்பையில் நிருபர்களை சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: பொருளாதார மந்த நிலையால் மஹாராஷ்டிரா பாதிப்புகளை சந்தித்து வருகிறது. தொடர்ந்து 4 ஆண்டுகளாக மாநிலத்தில் உற்பத்தி துறை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இந்த மாநிலம் இன்று சந்திக்கும் பிரச்னைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. முதலீட்டாளர்கள் வேறு மாநிலத்திற்கு செல்கின்றனர்.
முன்னர், இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடத்தில் இருந்த மாநிலம், தற்போது, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்ற உறுதிமொழியை மீறி, தற்கொலையில் முன்னிலை வகிக்கிறது.விவசாயிகள் பிரச்னையை சந்தித்த போது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில், அவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
மத்திய அரசின் ஏற்றுமதி இறக்குமதி கொள்கை விவசாயிகளை பாதிக்கிறது. பொருளாதார மந்த நிலையும், அரசின் பாராமுகமும் மக்களை பாதிக்கிறது. நகர்ப்புறங்களில் மூன்றில் ஒருவர் வேலையில்லாமல் உள்ளார். ஆண்களும், பெண்களும் குறைந்த சம்பளம் உடைய பணிகளுக்கு செல்கின்றனர். ஆனால், மத்திய அரசு மற்றவர்களை குறை சொல்கிறது. மற்றவர்களை குறை சொல்வதை நிறுத்திவிட்டு பொருளாதார நிலைமை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். 370வது பிரிவை நீக்கிய விதம் தவறானது. இந்த நீக்கம் தற்காலிகமானது என நம்புவோம். எந்தவொரு முடிவானாலும் மக்களின் ஆதரவுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
17-அக்-201921:45:03 IST Report Abuse
Ramakrishnan Natesan சின்ன விஷயம் கணவன் அவசரத்திற்கு பணம் சேர்த்து வைத்தான் (காங்கிரஸ் ) மனைவி அதை எடுத்து ஸ்வாகா செய்து விட்டால் (பிஜேபி) ( RESERVE BANK IL உள்ள பணம் ஸ்வாகா ) அப்புறம் நாடு எப்படி உருப்படும் (சேர்த்த வைத்த பணத்தை சிக்கனமா செலவு செயுங்க என்றால் முதலுக்கே மோசம் போன கதை தான்
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
17-அக்-201922:02:02 IST Report Abuse
Chowkidar NandaIndiaரொம்ப சிம்பிள். ஆனா அந்த கணவன் (கான்க்ராஸ்) பணம் சேர்த்து அதை அனுப்பிச்சது வெளிநாட்டுல இருக்கற அவன் சின்ன வீட்டுக்கு தானே (இத்தாலி). இருக்கற பணத்தை எல்லாம் சின்ன வீட்டுக்கு கொடுத்தாச்சு. அப்புறம் எப்பிடி அவன் வீட்டுல பணம் இருக்கும். அதனால தான் உஷாரான அவன் மனைவி அக்கம்பக்கத்தில் கடன் வாங்கி (RBI) வீட்டு நெலமையை சமாளிக்கறா. புரியுதா....
Rate this:
Share this comment
Balaji - Chennai,இந்தியா
18-அக்-201900:24:02 IST Report Abuse
Balajiநடேஷன் ஜாமி.. அமெரிக்க போயும் உண்மையா வெளங்கிக்கமாட்டேன்கி. ஊறல் போட்டு பனத்த ஸ்வாஹா பண்ணது தான் காங்கிரஸ் செஞ்ச சோலி ஜாமி. பணத்தை அவுங்க சொந்த கணக்குல செத்து வெச்சிக்கிணங்க......
Rate this:
Share this comment
Cancel
Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
17-அக்-201921:38:39 IST Report Abuse
Chowkidar Modikumar இத்தாலிய மங்கை சோனியா எழுதி கொடுக்கும் வரியை மட்டுமே பேசும் இந்த மண் இந்திய பொருளாதாரத்தை பற்றி பேச வில்லை. பிரதமர் மோடி அவர்களின் சீர்திருத்த கொள்கையால் பாதிக்க பட்டுள்ள கொள்ளை அடித்து சம்பாதிக்க முடியாமல் திணறும் காங்கிரஸ், திமுக மற்றும் எதிர் கட்சிகளின் சோரம் போன பொருளாதாரத்தை பற்றி தான் இந்த மண் கவலை படுகிறது .
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
17-அக்-201921:11:57 IST Report Abuse
வல்வில் ஓரி அசுரன் படம் நூறு கோடி வசூலாம் .. தமிழனின் பொருளாதாரம் வலுவா இருக்கும்போலயே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X