பொது செய்தி

இந்தியா

311 இந்தியர்களை நாடுகடத்தும் மெக்சிகோ

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (15)
Advertisement

புதுடில்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற சென்ற, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 311 பேரை, மீண்டும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுகின்றனர்.


மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவில் ஊடுருபவர்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வற்புறுத்தி இருந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சர்வதேச புரோக்கர்களின் உதவியுடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஒரு பெண் உட்பட 311 பேர், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேற சென்றதாக தகவல் வெளியானது. அவர்களை மெக்சிகோவிலேயே தடுத்து நிறுத்தினர். இவர்களிடம் தங்குமிடம், விமான கட்டணம், உணவு உள்ளிட்ட செலவுகளுக்காக தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

குடியுரிமை அதிகாரிகளின் விசாரணைக்கு பின் இவர்களை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த 311 இந்தியர்களுக்கும் ஒரு வழி பயண அவசர கால அனுமதி சீட்டு கொடுக்கப்பட்டு, அனைவரையும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தனி விமானம் மூலம் டொலுகா விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் வழியாக டில்லிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த விமானம் நாளை டில்லிக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணையை மெக்சிகோ அரசு மேற்கொள்ளும் எனவும் தெரிகிறது. நாடுகடத்தபடும் 311 இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் .

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
18-அக்-201911:57:02 IST Report Abuse
மணி அமெரிக்காவுல உள்ள எல்லா இந்தியர்களையும் இங்கே அனுப்பி வையுங்க ப்ளீஸ்...எங்க நாடு முன்னேற வேண்டாமா?
Rate this:
Share this comment
Cancel
Thirumoolar - chennai,இந்தியா
18-அக்-201901:12:03 IST Report Abuse
Thirumoolar முதலில் இந்தியாவில் உள்ள இந்த அமெரிக்கா மோகத்தை குறைக்க வழி செய்த பிறகு இவர்களை பற்றி நாம் பேசலாம் ....நாம் கடந்த 30 வருடங்களாக நம் கல்வி அறிவையும் ஆட்களையும் ஏற்றுமதி செய்து கொண்டுதான் இருக்கிறோம் இதை தடுக்க வேண்டும் என்றால் நம் நாடு சட்டங்களை கடுமை ஆக்கி வளர்ச்சியையும் அறிவையும் பெருக்க வேண்டும்....நடந்தால் செல்வது குறையலாம் .....
Rate this:
Share this comment
Cancel
Diya -  ( Posted via: Dinamalar Android App )
17-அக்-201919:38:42 IST Report Abuse
Diya Even with proper work visa, it is difficult to live there. Visa extensions are not easy nowadays and by the time one gets visa extension, hardly six to nine months will be left for another extension. So much of documents in paper mode, follow ups with the visa team is not an easy job. Wondering how these illegal immigrants are managing their day to day lives without visa. It is better to live in home country with pride.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X