வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்: அமித்ஷா

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (94)
Share
Advertisement

வாரணாசி: இந்தியாவின் பார்வையில் வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.latest tamil news


உ.பி., மாநிலம் வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அமித்ஷா பேசியதாவது:
வீர சாவர்க்கர் மட்டும் இல்லையென்றால் 1857ம் ஆண்டு நடந்த முதல் இந்திய சுதந்திர போர் வரலாற்றில் ஆங்கிலேயர்களின் பார்வையில் தான் பதிவாகி இருக்கும். அது தான் நமக்கும் தெரிந்திருக்கும். முதல் இந்திய சுதந்திர போர் என்ற வார்த்தையை கூறியவர் சாவர்க்கர் தான். இல்லையெனில் நமது குழந்தைகள் ஆங்கிலேயேர்களுக்கு எதிரான கலகம் என்று தான் எண்ணியிருப்பார்கள். யாரையும் புண்படுத்தாமல் இந்திய வரலாற்றை இந்தியாவின் பார்வையில் மீண்டும் எழுதப்பட வேண்டும்.


latest tamil news


இங்குள்ள வரலாற்று அறிஞர்களிடம் இதனை கேட்டுக் கொள்கிறேன். நமது பார்வையில் இருந்து நம் வரலாற்றை எழுதுவது கடமை. எவ்வளவு காலம் தான் நாம் ஆங்கிலேயேர்களை குறை சொல்லிக்கொண்டிருக்க போகிறோம்.
நமக்கு யாருடனும் எந்தவித மோதலும் இல்லை. எனவே உண்மையை எழுத வேண்டிய தருணம் இது. தற்போதைய தலைமுறைக்கு விக்கிரமாதித்யா போன்ற மாமன்னர்களை தெரிவதில்லை. ஏனெனில் அவரை பற்றி எந்த ஆவணங்களும் நம்மிடத்தில் இல்லை. பிரதமர் மோடியின் முயற்சியால் உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்து வருகிறது. உலகளாவிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவதை உலகமே உற்று நோக்குகிறது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
19-அக்-201914:22:37 IST Report Abuse
Rafi இவர்கள் முடிந்து போன ஆட்சியை பற்றியே கூறி காலத்தை கடத்தி கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு போட்டியாக பொருளாதாரனத்தை உயர்த்தினார்களா?
Rate this:
Share this comment
Cancel
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
18-அக்-201917:10:44 IST Report Abuse
Ravi Chandran வரலாறை மாற்றி எழுதுங்கள் இந்தியா குஜராத்காரர்களால் தான் ஆளப்படும் என்று. மொத்த நாட்டை சேட்டுக்கு குத்தகைக்கு கொடுத்தாச்சு என்று
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
18-அக்-201914:47:27 IST Report Abuse
ganapati sb நம்மை பிரித்து ஆள தாழ்வு மனப்பான்மை புகுத்த ஆதாரங்கள் ஏதும் இன்றி ஆங்கிலேயன் கால்டுவெல் மெக்காலே ஆகியோர் எழுதிய கட்டுக் கதையையே நாம் சரித்திரம் என படித்துக்கொண்டு இருக்கிறோம் அதை மாற்றி நம் முன்னோர் இலக்கியங்களில் உள்ளபடி நம் கண்ணெதிரே கம்பிரமாய் நிற்கும் ஆலயங்கள் கோட்டைகளின் படி நம் செழிப்பான வளமையான கலாச்சாரத்தை வீர சரித்திரத்தை எழுத வேண்டியது காலத்தின் கட்டாயம் .
Rate this:
Share this comment
??????? - Thiruvaiyaru,இந்தியா
19-அக்-201901:42:36 IST Report Abuse
???????எப்படி மாற்றினாலும் ஜனாதிபதியே கோவிலுக்குள்ளே போகமுடியாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X