பிரிட்டன் ‛குட்பை': ஒப்பந்தம் கையெழுத்து

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (7)
Advertisement

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.






ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது. இதற்காக பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் முன்பு பிரிட்டன் பிரதமராக இருந்த தெரசாமே தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால் இழுபறி நீடித்து வந்த நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். அவரும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வந்தார்.




இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதனை போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில், கட்டுப்பாட்டை திரும்பப் பெறும் ஒரு புதிய ஒப்பந்தம் எங்களுக்கு கிடைத்துள்ளது. இதற்காக சனிக்கிழமை பாராளுமன்றம் கூடுகிறது, என பதிவிட்டிருந்தார்.


மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் ஜீன் கிளாட் ஜங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்துக்கான நியாயமான மற்றும் சீரான ஒப்பந்தமாகும். இது தீர்வுகளைக் காண்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு சான்றாகும். இந்த ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளிக்க பரிந்துரைக்கிறேன். இவ்வாறு ஜீன் கிளாட் ஜங்கர் பதிவிட்டிருந்தார்.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
17-அக்-201921:08:39 IST Report Abuse
rmr இது ஒரு நல்ல முடிவு பிரான்ஸ் ஒரு அகதிகள் நாடு அந்த அளவுக்கு அங்கு மக்கள் குடியேறி உள்ளனர் (அகதிகள் என்று சொல்லி ) அது போன்ற நிலை அவர்கள் நாட்டிற்கு வருவதை தடுத்து உள்ளார் . அவர்கள் நாட்டை காப்பாத்த அவர்களுக்கு உரிமை உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
17-அக்-201920:41:06 IST Report Abuse
svs இந்த ஓப்பந்தம் மீண்டும் இங்கிலாந்து பாராளுமன்றம் ஏற்று கொள்ளாது......பழைய கதைக்கே திரும்பும் வாய்ப்பு நிறைய உள்ளது .....
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
17-அக்-201920:05:03 IST Report Abuse
blocked user எப்படியோ தப்பித்தார்கள். இனி ஏராளமாக சிரிய அகதிகளை உள்ளே அனுமதித்திக்க வேண்டியது இல்லை..
Rate this:
Share this comment
kumzi - trichy,இந்தியா
17-அக்-201922:58:48 IST Report Abuse
kumziஇங்கிலாந்தில் மூர்க்க கூட்டத்தின் அட்டகாசத்தால் தான் ஐரோப்பிய யூனியன்ல் இருந்து விலகவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X