வங்கதேச படையால் இந்திய வீரர் சுட்டுக்கொலை

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement

கோல்கட்டா: எல்லை தாண்டியதாக இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மீது வங்கதேச படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் பலியானார்.



latest tamil news


இந்தியா - வங்கதேசம் எல்லைப்பகுதியில் உள்ள பத்மா நதியில் இன்று (அக்., 17) காலை மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது எல்லை தாண்டியதாக வங்கதேச பாதுகாப்பு படையினர் அவர்களை கைது செய்தனர். அவர்களை காக்மரிச்சரில் உள்ள பாதுகாப்பு முகாமில் வைத்திருந்தனர். அதில் இருவரை வங்கதேச பாதுகாப்பு படையினர் விடுவித்தனர்.


latest tamil news


கைது செய்யப்பட்ட மீனவரை தேடிக் கண்டுபிடிக்க இந்திய பாதுகாப்பு படையினர் சென்றனர். அப்போது, எல்லை பாதுகாப்பில் இருந்த வங்கதேச படையினர் இந்திய வீரர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், தலைமை கான்ஸ்டபிள் விஜய் பன் சிங் தலையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இரு வீரர்களின் வலது கையில் குண்டு காயங்கள் ஏற்பட்டன.
பலத்த காயமடைந்த விஜயை, அருகில் இருந்த மருத்துவ முகாமில் சேர்த்தனர். ஆனால், தலையில் குண்டு பாய்ந்ததால் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
23-அக்-201911:05:18 IST Report Abuse
narayanan iyer இப்போதான் அவுங்க நாட்டு பிரதமர் வந்து சொந்தம் கொண்டாடிட்டு போனாங்க . அதுக்குள்ளேயா இந்த விபரீதம் பழைய பெயர் நினைவுக்கு வந்துவிட்டதோ (கிழக்கு பாகிஸ்தான்). நாமும் இந்தியாவை எதிர்ப்போம் என்ற முடிவா??
Rate this:
Cancel
Sridaran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-அக்-201901:18:53 IST Report Abuse
Sridaran சில ஆண்டுகளுக்கு முன்பு 5 bsf வீரர்களை பங்களாதேஷ் சுட்டு கொன்றது. அப்போது நமது அரசு வெறும் கண்டன அறிக்கை மட்டுமே வெளியிட்டது. தற்போது மேலும் ஒரு வீரர்? என்ன செய்ய காத்திருக்கிறது பிஜேபி அரசு?
Rate this:
Cancel
??????? - Thiruvaiyaru,இந்தியா
18-அக்-201900:44:43 IST Report Abuse
??????? நம் நாட்டின் தவறான வெளியுறவு கொள்கையால் அண்டை நாடுகள் அனைத்தும் நமக்கு எதிராக உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X