துருக்கியில் அமெரிக்க அணு ஆயுதங்கள்: உளறிக் கொட்டிய டிரம்ப்

Updated : அக் 17, 2019 | Added : அக் 17, 2019 | கருத்துகள் (5)
Advertisement
அணு ஆயுதங்கள், உளறி கொட்டினார்,  டிரம்ப்

வாஷிங்டன் : அமெரிக்காவின் அணு ஆயுதங்கள், துருக்கியில் வைக்கப்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி செய்து செய்தியாளர்களிடம் உளறி கொட்டினார்.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில், ஐ.எஸ்., படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிட்டு வந்தன.சிரியாவின் வடக்கு பகுதியில் வலுவாக உள்ள குர்து மக்களின் படைகள், இதற்கு உதவின. சிரியாவில் இருந்து, அமெரிக்கப் படைகள் சமீபத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டன.
அதைத் தொடர்ந்து, சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்து படைகளுக்கு எதிராக, அதன் அண்டை நாடான துருக்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது.





துருக்கியின் இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்கா, பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.போர் நடவடிக்கைகளை நிறுத்தும்படி, அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை ஏற்க துருக்கி மறுத்துள்ளது. நிலைமையை அறிந்த அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், துருக்கி விரைகிறார்
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில், நிருபர்களை சந்தித்தார்.'அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் துருக்கியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, அமெரிக்காவுக்கு எதிராக துருக்கி செயல்படுகிறது. அதனால், நம் ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்குமா' என, நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்....அரசு ரகசியங்கள் பாதுகாக்க வேண்டிய அதிபர் பதவியில் உள்ள டிரம்ப், இதை ஒரு சாதாரணமான கேள்வியாக எடுத்துக் கொண்டு, ''பாதுகாப்பாக இருக்கும் என நம்புகிறோம். துருக்கியில் நமக்கு மிகவும் வலுவான விமானப் படை தளமும் உள்ளது,'' என, கூறினார்.
அமெரிக்காவின் அணு ஆயுதங்கள், துருக்கியில் வைக்கப்பட்டுள்ளதாக, பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகின்றன.ஆனால், இதுவரை அரசோ, ராணுவமோ அதை உறுதி செய்யவில்லை. தற்போது, அதை உறுதிப்படுத்தும் வகையில், டிரம்ப் உளறி கொட்டினார்.
இது குறித்து, பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியுள்ளதாவது:வெளிப்படுத்தக் கூடாத விஷயங்களை தெரிவித்து, சிக்கலில் மாட்டுவது, டிரம்புக்கு இது புதிதல்ல. பல முறை இவ்வாறு முக்கியமான விஷயங்களை தெரிவித்துள்ளார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-அக்-201905:47:18 IST Report Abuse
ஸாயிப்ரியா இவர் இப்படி அடிக்கடி உளறினால் மற்ற நாடுகள் எச்சரிக்கையாக இருக்கும். இவர் வழி தனிவழி.
Rate this:
Share this comment
Cancel
Murugaiyapillai Vedaraju - Chennai,இந்தியா
18-அக்-201900:57:24 IST Report Abuse
Murugaiyapillai Vedaraju டிரம்ப் எப்போவோ கோமாளி Buffoon ஆகி விட்டார்.
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
18-அக்-201900:47:26 IST Report Abuse
ashak அட பாவத்த
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X